மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சமகால வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு பொதிகள் மற்றும் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிர்தகழி ,பெரிய உப்போடை ,திருப்பெருந்துறை திராய்மடு ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக 900 குடும்பங்களுக்கு
சமைத்த உணவை வழங்கியது.
மேலும், 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டு. இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரடியாக இப்பிரதேசங்களுக்கு சென்று இந்நிவாரணங்களை வழங்கி வைத்தார்.
சில பிரதேசங்களுக்கு இயந்திரப்படகு மூலம் கொண்டு சென்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இ.கி.மிசன் இல்ல மாணவர்கள் இஅபிமானிகள் மற்றும் தொண்டர்கள் இப்பணியில் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினர்.
காரைதீவு குறூப் நிருபர் – வி.ரி.சகாதேவராஜா
The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.கி.மிசனினால் நிவாரணம் வழங்கி வைப்பு appeared first on Thinakaran.