ரோடியோ மிர்ச்சியில் தொடங்கிய பயணம் இன்று அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பட்டப்பெயர் சூட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனில் அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. ஆர்ஜே வாக இருந்த சமயத்தில் அவருக்கு 12பி படத்தின் மூலம் நடிக்க ஜாக்பாட் அடித்தது. அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக்கொண்டு படங்களில் டயலாக் ரைட்டராக பணியாற்றினார். பின் அதன் மூலம் பட வாய்ப்புகளும் வர அதை அப்படியே பற்றிக்கொண்டு இன்று சூது கவ்வும் படம் வரை நடித்து மக்களை எண்டர்டெய்ன் செய்துக்கொண்டிருக்கிறார்.
சிவா பேசினாலே போதும் அதில் கருத்து இருக்கோ இல்லையோ காமெடி கட்டாயம் இருக்கும். அப்படி அவருடைய படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.
இவர் வெங்கட் பிரபு படங்கள் மூலம்தான் இவருக்கு சினிமா துறையில் ஃபோக்கஸ் கிடைத்தது. பின் அவர் நடித்த தமிழ் படம், கலகலப்பு 2 போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. பின் சில காலம் அவர் படங்கள் ஏதும் வெளிவராத நிலையில் இந்த மாதம் 13ஆம் தேதி, சூதுகவ்வும் பாகம் 2 வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போதுதான் அவருடைய பிஎம்டபிள்யூ கார் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விஷயத்தை பகிர்ந்துக்கொண்டார்.
https://youtube.com/shorts/h_X4sYI7X7Y?si=UJYaMcEEllCcVUij
அதில் “ நான் பிஎம்டபிள்யூ கார் வெச்சிருந்தேன். அந்த காரை யுவன் தான் வாங்க சொல்லி ஒரு கடையை காட்டினார். நானும் போனேன். கடையில் இருந்தவர் இந்த கார்தான் சார் உங்களுக்கு ஏற்ற தகுதியான கார் என்று சொல்லி அந்த காரை வாங்க வைத்தார். ஆனால் அந்த கார் சென்னை வெள்ளத்தில் அடிச்சிட்டு போயிடுச்சு. அப்போ நான் சிரிக்கதான் செய்தேன். காரை யாராவது எடுத்துட்டு போயிருந்தான் ஏண்டா எடுத்தனு கேட்டிருக்கலாம். ஆனால் கொண்டுபோனது இயற்கை.
இயற்கையா பார்த்து கொடுத்த வாய்ப்புகள் மூலம் நடிச்சு , சம்பாதித்துதான் அந்த காரை வாங்கினேன். பின் இயற்கையே அந்த காரை எடுத்துட்டு போயிருச்சு. அதுல லாஸ்னு சொல்லிக்க எதுவும் இல்லை “ என கூலாக பேசியினார்.
.