நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள 375/5 பாலம் இன்று (27) அதிகாலையில் உடைந்துள்ளது.
இதனால், இந்த வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாண பணிப்பாளர் காரியாலயத்தின் மாகாண பணிப்பாளர் எம்.பி அலியார், பிரதம பொறியியலாளர் ரி. சிவசுப்பிரமணியம் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஷட். எம். அஸ்மிர் உள்ளிட்ட அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் இணைந்து மண்மூடையிட்டு பாலத்தின் ஊடாக தற்காலிக போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, இந்த பாலத்தினை நிரந்தரமாக செப்பனிடும் நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாண பணிப்பாளர் காரியாலயத்தின் மாகாண பணிப்பாளர் எம்.பி அலியார் தெரிவித்தார்.
நிந்தவூர் குறூப் நிருபர்
The post வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று – கல்முனை வீதி பாலம் உடைவு appeared first on Thinakaran.