வோடஃபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமாக பர்சனலைஸ்டு சாய்ஸ் நம்பர் என்னும் வசதியை வழங்கி உள்ளது. அதாவது விஐபிகளுக்கான பேன்சி நம்பர் சலுகையை நீங்களும் இப்போது பெற முடியும். உங்கள் சிம் கார்டின் நம்பரை உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் வோடபோன் இந்தியாவின் இந்த விஐபி சாய்ஸ் நம்பர் வசதியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றிய பதிவுதான் இது.

இந்தியாவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி பேன்சி நம்பரை பெற முடியும்

விளம்பரம்
  • கொடுக்கப்பட்டுள்ள வோடஃபோன் இந்தியாவின் புதிய இணைப்பை பெறுவதற்கான https://www.myvi.in/new-connection/choose-your-fancy-mobile-numbers-online என்ற பக்கத்திற்கு செல்லவும். ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் ஆகியவற்றில் எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும்.

  • உங்களுடைய தற்போதைய மொபைல் நம்பரை அதில் என்டர் செய்யவும். அதாவது நீங்கள் ஜியோ, ஏர்டெல் போன்ற வேறு எந்த நிறுவனத்தின் சேவையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அதனை என்டர் செய்து பின்கோடை என்டர் செய்யவும்.

  • இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் பேன்சி நம்பர் காம்போவை என்டர் செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் பிறந்த வருடம் 1996 என்றால், இந்த எண்ணை கொண்ட ஃபேன்சி நம்பர் உங்களுக்கு தேவை எனில், 1996 என்பதை என்டர் செய்தால் அந்த பேன்சி நம்பரை உள்ளடக்கிய 10 இலக்க எண்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு பிடித்த நம்பரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

  • பிறகு சிம் கார்டை எந்த முகவரிக்கு டெலிவரி செய்ய வேண்டுமோ அதனை என்டர் செய்யவும். இதனை உறுதி செய்ய உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP) ஒன்று அனுப்பப்படும். அதனை என்டர் செய்தால் உங்களது வீடு தேடி பேன்சி நம்பர் கொண்ட சிம் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

இதையும் படிக்க:
புதிய லுக்கில் ஹைடெக் மாடல்களை களத்தில் இறக்கும் ஜியோ… விலை மற்றும் அம்சங்கள்

ஆஃப்லைன் வழியாக வோடஃபோன் விஐபி பேன்சி நம்பரை பெறுவது எப்படி?

  • வோடஃபோன் இந்தியா ஸ்டோருக்கு செல்ல வேண்டும். அங்குள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் உங்களது கோரிக்கையை வைத்தால், அவர் அப்போது உள்ள அனைத்து விஐபி பேன்சி நம்பர்களையும் உங்களுக்கு காண்பிப்பார்.

  • ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்த பேன்சி நம்பர் கிடைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை அதிகாரி காண்பிக்கும் எண்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பதுதான் ஒரே வழி.

  • ஆதார் போன்ற உங்களது அடையாள அட்டைகளின் நகல்களை உங்களது சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் அறிவுரையின்படி, அவரிடம் அளித்து, உரிய கட்டணத்தை செலுத்தி உங்களது சிம் கார்டை பெற்றுக் கொள்ளவும்.

  • உங்களுக்கேற்ற ரீசார்ஜ் பிளானை தேர்வு செய்தால் உங்களது சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.

  • நீங்கள் சிம் கார்டு வாங்கி இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் உங்களது சிம் ஆக்டிவேட் செய்யப்படும்.

இதையும் படிக்க:
புதிய ஹவாய் GT5 ஸ்மார்ட்வாட்ச்சில் இவ்வளவு வசதிகள் இருக்கா..? விலை எவ்வளவு தெரியுமா?

இந்த விஐபி சாய்ஸ் நம்பரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது மொபைல் நம்பர் பேன்சி ஆகவும், எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்

மேலும் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்களது வாடிக்கையாளர்கள் உங்களது நம்பரை எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் இது உதவும்.

சிலர் பேன்சி நம்பர் பயன்படுத்துவது ஒரு சமுதாய அந்தஸ்தாகவே கருதுகிறார்கள்.

நியூமராலஜி அடிப்படையில் பேன்சி நண்பரை தேர்ந்தெடுப்பதையும் சிலர் விரும்புகின்றனர்.

விளம்பரம்

.



Source link