சினிமா படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் நடிகர் ஒருவர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக நடிகை குஷ்பு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்… இது சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஷ்புவிடம், அத்துமீற முயன்ற நடிகர் யார்? குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது மேடைகளில் தனது மனதில் பட்டதை துணிவுடன் பேசும் நடிகை குஷ்பு, சில நேரம் சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார். இந்த நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலில் பேசியது, தற்போது திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது. அண்மையில் ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகை மட்டும் இன்றி, ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் புயலை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கைது படலம் நடைபெற்ற நிலையில், நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது… நடந்தது என்ன?

விளம்பரம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் குஷ்பு. 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், 1980-ல் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். தமிழில், 1988-ம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, கிழக்கு வாசல், நடிகன் போன்ற படங்களிலும் நடித்தாலும், 1991 ஆம் ஆண்டு வெளியான சின்னத் தம்பி படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

மேலும், கமல்ஹாசனுடன் சிங்காரவேலன், ரஜினிகாந்துடன் அண்ணாமலை, உள்ளிட் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக மின்னினார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த குஷ்பு, தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதை 3 முறை வென்றுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தடம் பதித்த குஷ்பு, திருமணத்துக்குப் பின் அவரின் கணவர் சுத்தர்-சி உடன் இணைந்து சினிமா தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து வருகிறார். இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விளம்பரம்

News18

இந்த நிகழ்ச்சியில், குஷ்புவும் கலந்து கொண்டார். அப்போது, திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, , “திரைத்துறையில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பெண்கள் சவால்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறினார். யாரோ ஒருவர் தங்களைத் தவறாக நடத்துவதாக உணரும் போது, பெண்கள் அதுகுறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நீண்ட நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது தன்னிடமே ஒரு ஹீரோ தவறான கண்ணோட்டத்துடன் நெருங்கியதாக கூறினார்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
Bigg Boss Season 8 Eviction | இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?

ஆனால், தான் துணிந்து அந்த நடிகரை எச்சரித்து அனுப்பியதாக தெரிவித்தார். தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் யார், எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து குஷ்பு தெரிவிக்கவில்லை. பல்வேறு மொழிப் படங்களில் நடித்த குஷ்பு, எந்த மொழிப் படத்தின் படிப்பிடிப்பின் போது தனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது என்பது குறித்தும் குறிப்பிடவில்லை. இருந்த போதும், தன்னிடம் ஒரு நடிகர் தவறாக நடக்க முயற்சித்ததாக, பொது வெளியில் குஷ்பு பகிரங்கமாக குற்றம் சாட்டிய சம்பவம், திரையுலகில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது…

விளம்பரம்

.



Source link