Last Updated:

தியேட்டர் ரிலீஸ் போன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல விறுவிறுப்பான இணைய தொடர்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் வர்த்தகம் பரவலாக்கப்பட்டுள்ளது.

News18

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் மற்றும் இணைய தொடர்களை அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்கள், இணைய தொடர்கள் குறித்து பார்க்கலாம்.

கிளாடியேட்டர் 2 – சூப்பர் ஹிட்டான கிளாடியேட்டர் படத்தின் 2- பாகம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் நேற்று (டிசம்பர் 25) வெளியானது. இந்த படத்தில் பெட்ரோ பாஸ்கல், டென்சில் வாஷிங்டன், ஜோசப் குய்ன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்குவிட் கேம்ஸ் சீசன் 2 – நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த இணைய தொடர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இந்த இணைய தொடர் குறித்த விமர்சனங்கள் அடுத்து வரும் நாட்களில் ரசிகர்களின் கவனத்தை பெறும்.

பூல் புலையா 3  – இந்தியில் வெளியான ஹாரர் காமெடி படம் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை டிசம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் கார்த்திக் ஆரியன், வித்யா பாலன், மாதுரி தீட்சித், திரிப்தி டிம்ரி, விஜய் ராஜ், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி காட்சிகளும், திகில் காட்சிகளும் நிறைந்த அருமையான பொழுதுபோக்கு சித்திரமாக வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க – ஹீரோவாக ரஜினி வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்போதே இவ்வளவா

சிங்கம் அகெய்ன் – அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நாளை டிசம்பர் 27 இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ஆக்ஷன், டிராமா ஜேனரை சேர்ந்த இந்த திரைப்படத்தில் அஜய் தேவகன், டைகர் ஷெராப், கரீனா கபூர், தீபிகா படுகோனே, அர்ஜுன் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ரோஹித் ஷெட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

”ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின் உருவாக்கம் குறித்த டாக்குமெண்டரி டிசம்பர் 25, நேற்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஆஸ்கர் விருது அள்ளிய இந்த படத்தின் மேக்கிங் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் ரிலீஸ் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த திரைப்படம் வசூலித்தது. இந்த டாக்குமெண்டரியை சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரை துறையினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.



Source link