Last Updated:
WhatsApp update | ஐஓஎஸ் யூசர்கள் மட்டும் பயன்படுத்தும் விதமாக புதியதொரு வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளை சேர்த்துக்கொண்டே வருகிறது. பல்வேறு வசதிகள் இன்னமும் சோதனை முறையில் இருந்தாலும், வாட்ஸ் அப் மென்மேலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. அந்த வகையில் தற்போதைய நிலையில் ஐஓஎஸ் யூசர்கள் மட்டும் பயன்படுத்தும் விதமாக புதியதொரு வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது, இனி வாட்ஸ் அப்பை கொண்டு டாக்குமென்ட்டை ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு நீங்கள் வாட்ஸ்அப் வழியாகவே பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கு முன்பு வரை ஸ்மார்ட்ஃபோன் கேமராவை கொண்டு டாக்குமெண்டை ஸ்கேன் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை மட்டுமே நம்பி வந்த நிலையில் வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட் யூசர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போதைய நிலையில், ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இந்த புதிய அப்டேட், இனிவரும் காலங்களில் ஆண்ட்ராய்டு யூசர்களுக்காக ப்ளேஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி இந்த புதிய அப்டேட் வழக்கத்திற்கு வந்தவுடன் வாட்ஸ்அப் யூசர்கள் மூன்றாம் தரப்பு ஸ்கேனிங் செயலிகளை தாராளமாக அன்இன்ஸ்டால் செய்துவிடலாம். அந்த அளவுக்கு வாட்ஸ்அப் ஸ்கேன் வசதி துல்லியமாகவும், அதிக தரத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்த அப்டேட்டை அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் இல்லை என்றாலும், வரும் வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் யூசர்களுக்கு இந்த அப்டேட் விரிவுபடுத்தப்படும். வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி அலுவலக கோப்புகளை பகிர்ந்து கொள்பவர்களுக்கும், ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்பவர்களுக்கும் இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிக்க: புத்தாண்டு ஸ்பெஷல்… இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 14சி 5ஜி மாடல் ஸ்மார்ட்ஃபோன்…!
எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்துவது?
- வாட்ஸ் அப் ஸ்கேன் வசதியை பயன்படுத்துவதற்கு முதலில் நீங்கள் டாக்குமென்ட்டை பகிர வேண்டியவர்களின் சாட்டிற்கு சென்று அங்கு ஷேரிங் மெனு என்பதை தேர்வு செய்யவும். அதில் டாக்குமெண்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- அந்த இடத்தில் கேமரா என்ற ஆப்ஷனை பார்க்க முடியும். கேமராவை செலக்ட் செய்தால் டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்வதற்கான ஆப்ஷனும் காண்பிக்கப்படும்.
- டாக்குமென்டை ஸ்கேன் செய்து தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம்.
- டாக்குமெண்ட் ஸ்கேன் செய்த பிறகு யூசர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளில் செய்வது போலவே, அதனை கிராப் செய்வது, அதன் கான்ட்ராஸ்ட் அல்லது பிரைட்னஸ் அட்ஜஸ்ட் ஆகியவற்றை செய்ய முடியும்.
- தேவையான திருத்தங்களை செய்து, பிறகு நீங்கள் உங்களது டாக்குமெண்டை பகிரலாம்.
இதையும் படிக்க: ஸ்லிம் மாடல் மற்றும் கேலக்ஸி ரிங்கை அறிமுகப்படுத்தும் சாம்சங்… எப்போது தெரியுமா…?
தற்போதைய நிலையில் ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, வரும் வாரங்களில் ஆண்ட்ராய்ட் யூசர்களுக்கும் கிடைக்கும். ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்பவர்களுக்கு ஏஆர் ஸ்டிக்கர்கள், ஏஆர் எஃபக்ட்ஸ், பேக்ரவுண்ட் மற்றும் பில்டர்கள் ஆகியவற்றை மாற்றிக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
December 31, 2024 10:43 AM IST