இந்தியாவில் ரியல்மி GT 7 ப்ரோ விலை:

ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.59,999 விலையிலும் மற்றும் 16GB RAM/512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.65,999 விலையிலும் கிடைக்கிறது. இந்த போன் ஆனது நவம்பர் 29ஆம் தேதி முதல் அமேசான், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் ஸ்டைலானது மற்றும் மார்ஸ் ஆரஞ்சு மற்றும் கேலக்ஸி கிரே ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வருகிறது.

வெளியீட்டு சலுகைகளின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.3,000 வரை வங்கி சலுகையையும் பெறலாம். இது தவிர நவம்பர் 28ஆம் தேதிக்குள் ப்ரீ ஆர்டர் செய்யப்படும் இந்த போன்களுக்கு 12 மாத எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டியையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

ரியல்மி GT 7 ப்ரோ விவரக் குறிப்புகள்:

ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz வரை ரெஃபிரேஷ் ரேட் மற்றும் HDR 10+ மற்றும் டால்பி விஷன்க்கான ஆதரவு கொண்ட 6.78 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ரியல்மி ஃபிளாக்ஷிப் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான IP68 + IP69 மதிப்பீடு கொண்டுள்ளது.

அட்ரினோ 830 GPU உடன் இணைக்கப்பட்ட சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசசர் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். ரியல்மி GT 7 ப்ரோ ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட மிகப்பெரிய 6500mAh பேட்டரித் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் 30 நிமிடங்களில் போனை முழு சார்ஜ் செய்துவிடலாம்.

இதையும் படிக்க: ஐபோனில் இருக்கும் டேட்டாக்களை Mac அல்லது PCக்கு ஈஸியா மாற்றுவது எப்படி…?

கேமராக்களை பொறுத்தவரையில், ரியல்மீ GT 7 ப்ரோ போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. அதில் OIS உடன் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் உடன் 50 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் ஃபிரன்ட் கேமராவைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: iPhone அம்சங்களுடன் OPPO Find X8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்….விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரம்! 

இதில் ஆண்ட்ராய்டு 15ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI 6.0 மூலம் இயங்குகிறது. மேலும் 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இதில் 5G, டூயல் 4G Volte, வை-பை 7, ப்ளூடூத் v5.4, GPS, Galileo, Baidu, QZSS, NFC, USB டைப்-C போர்ட் போன்ற இணைப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.



Source link