ஏனெனில், இது ஒரு இன்டர்நெட் உலகம், எப்போது, ​​எங்கு இன்டர்நெட் மோசடி நடக்கும் என்று சொல்லவே முடியாது. எனவே, புதிய இடத்திற்கு செல்லும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். இது தவிர, பயணத்தின்போது டேட்டாக்களை இழக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. நீங்களும் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது உங்கள் டிவைஸ்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிகள்:

பப்ளிக் வைஃபை பயன்படுத்த வேண்டாம்:

அன்லிமிடெட் டேட்டாக்களுக்காக கஃபேக்கள் மற்றும் விமான நிலையங்களில் ஓபன் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகளை நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால், அது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மிகவும் ஆபத்தானவை. இந்த நெட்வொர்க்குகளை ஹேக் செய்வது மிகவும் எளிதானது மற்றும் ஹேக்கர்கள் உங்கள் தனிப்பட்ட டேட்டாக்களை திருடலாம். எனவே, முடிந்தவரை பொது வைஃபையை தவிர்க்கவும். நீங்கள் பப்ளிக் வைஃபையைப் பயன்படுத்த விரும்பினால், VPN (Virtual Private Network)ஐப் பயன்படுத்தவும்.

சார்ஜிங் ஸ்டேஷன்களை தவிர்க்கவும்:

காபி கடைகள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் மொபைல் போன்களை இலவசமாக சார்ஜ் செய்ய ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் மூலம், ஹேக்கர்கள் , டேட்டாக்களை ஹேக் செய்யக்கூடிய சாப்ட்வேர்-ஐ போனுக்கு அனுப்பி யூசர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை திருடலாம். எனவே, தொலைபேசியை பாதுகாப்பாக வைத்திருக்க போர்ட்டபிள் சார்ஜரை எடுத்துச் செல்வது நல்லது. மேலும், உங்கள் டிவைஸ்களை எந்த சார்ஜிங் ஸ்டேஷனுடனும் இணைப்பதைத் தவிர்க்கவும்.

பாதுகாப்பான பாஸ்வர்ட்டை அமைக்கவும்:

வீட்டிலோ அல்லது பயணத்திலோ எல்லா அக்கௌன்ட்களுக்கு ஒரே பாஸ்வர்ட்டை பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு அக்கௌன்ட்டிற்கும் வெவ்வேறு பாஸ்வர்ட்கள் இருக்க வேண்டும். மேலும், சமூக ஊடக அக்கௌன்ட்களுக்கு டூ ஃபாக்டர் அதென்டிகேஷனை செயல்படுத்தப்பட வேண்டும். ஒரே பாஸ்வர்ட்டை பயன்படுத்தி ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால், மற்ற எல்லா கணக்குகளும் ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளது. இது ஹேக்கர்கள் முக்கியமான டேட்டாக்களை திருடுவதை எளிதாக்குகிறது. எனவே, ஒவ்வொரு அக்கௌன்ட்டிற்கும் வெவ்வேறு பாஸ்வர்ட்களை செட் செய்வது மற்றும் டூ ஃபாக்டர் அதென்டிகேஷனை இயக்குவது அக்கௌன்ட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிமுறையாகும்.

இதையும் படிக்க: இனி போன் கால் மூலமாகவே ChatGPT-யிடம் பேசலாம்… OpenAI வெளியிட்ட அசத்தல் அப்டேட்…!

அடிக்கடி பேக்கப்களை எடுத்துக் கொள்ளுங்கள்:

ஃபோன்கள் அல்லது லேப்டாப்களில் டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிற ஆப்களை எப்போதும் அப்டேட் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த அப்டேட்கள் ஃபோன் அல்லது லேப்டாப்களில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகளை சரி செய்யும். அவற்றை இன்ஸ்டால் செய்வது ஹேக்கர்கள் டிவைஸ்களை தாக்குவதைத் தடுக்கிறது. மேலும், அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கியமான பைல்கள் எஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ்-ல் சேமிக்கப்பட வேண்டும். இதன் மூலம், போன், லேப்டாப் திருடப்பட்டாலும், சேதமடைந்தாலும் டேட்டா லாஸ் ஏற்பட வாய்ப்பில்லை.

பயணத்தின்போது பிரைவசியை இயக்கவும்:

பயணத்தின்போது உங்கள் டிவைஸ்-ல் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அதாவது, போன் மூலம் நீங்கள் புகைப்படம் எடுக்கும்போது, ​​புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று சொல்லும் லொகேஷன் சர்வீஸை ஆஃப் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் பிரைவசியை பாதுகாக்க முடியும். அதேபோல் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்று சமூக வலைதளங்களில் பதிவிடுவது நல்லதல்ல. ஏனெனில் இந்த தகவல் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க: இந்த டிசம்பர் மாதத்தில் ரூ.60,000க்குள் கிடைக்கும் 4 சிறந்த மொபைல் போன்கள்… லிஸ்ட் இதோ…!

முன்பின் தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்:

பயணம் செய்தாலும் சரி அல்லது வீட்டில் இருந்தாலும் சரி, தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்வது, மெசேஜ்கள் அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பது அல்லது தெரியாத அழைப்புகளுக்கு பதிலளிப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், உங்கள் தனிப்பட்ட டேட்டாக்களை திருட ஹேக்கர்கள் உங்களுக்கு அடிக்கடி இதுபோன்ற மெசேஜ்கள், லிங்க்கள் அல்லது மெயில்களை அனுப்புவார்கள்.



Source link