சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வாட்ச் 5 லைட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி அம்சங்கள், நீண்ட பேட்டரி ஆயுள் உள்ளிட்ட பிற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இது உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோருக்கு பயணத்தின்போது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும். அடிக்கடி சார்ஜ் செய்வதை தவிர்க்கும் விதமாக இது 18 நாட்கள் வரை நீடிக்கும் நீண்ட பேட்டரி ஆயுளுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரெட்மி வாட்ச் 5 லைட்டின் விலை:
செப்டம்பர் 26 முதல் விற்பனைக்கு வந்திருக்கும் ரெட்மி வாட்ச் 5 லைட்டின் விலை ரூ.3,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் சாம்பல் ஆகிய இரண்டு நிறங்களில் வந்திருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சை சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com, அமேசான் மற்றும் சியோமி ரீடெய்ல் பார்ட்னர்களிடமிருந்து ஸ்மார்ட்வாட்சை வாங்க முடியும். பண்டிகை கால ஆஃபர்கள் மற்றும் டீல்களை அமேசான் வழங்கி வருவதால் ரூ.200 தள்ளுபடி விலையில் இந்த ஸ்மார்வாட்சானது ரூ.3299-க்கு அமேசானில் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
ரெட்மி வாட்ச் 5 லைட், 600 நிட்ஸ் பிரைட்னசுடன் கூடிய பெரிய 1.96-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. எனவே பிரகாசமான சூரிய ஒளியில் கூட டிஸ்ப்ளே தெளிவாக இருக்கும். இது அறிவிப்புகளை கவனிப்பதற்கும், உடற்பயிற்சி புள்ளிவிவரங்களைக் கண்காணிப்பதற்கும் மற்றும் ஒரு ஆப்பில் இருந்து மற்றொரு ஆப்பை எளிதாக மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை மிகவும் எளிமையாக வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சில் உள்ளமைக்கப்பட்ட ஐந்து-சிஸ்டம் ஜிபிஎஸ் உள்ளது, இது ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயணம் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளின் துல்லியமான கண்காணிப்பை உறுதி செய்கிறது.
இதையும் படிக்க:
பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமா? – அறிமுகமாகும் 4 சிறந்த எலக்ட்ரிக் கார்கள்!
200-க்கும் மேற்பட்ட தொழில்முறை விளையாட்டு முறைகள் மற்றும் 10 உள்ளமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலைகள் பற்றிய தகவலை பயனர்களுக்கு வழங்குகிறது. இது 5 ஏடிஎம் நீர்-எதிர்ப்பு திறன் கொண்டது, தண்ணீரில் 50 மீட்டர் ஆழத்தில் 10 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இது நீச்சல் மற்றும் பிற தண்ணீர் விளையாட்டுகளுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரெட்மி வாட்ச் 5 லைட் ஸ்மார்ட்வாட்சில் புளூடூத் மூலம் தொலைபேசி அழைப்புகளை பெற முடியும். பயனர்கள் மெசேஜ்களுக்கு பதிலளிக்கவும், அழைப்புகளை நிர்வகிக்கவும் மற்றும் நேரடியாக கான்டாக்ட்ஸை பயன்படுத்தவும் வழி செய்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைலின் தேவையை இது சற்று குறைக்கிறது. குறிப்பாக, அடிக்கடி சார்ஜ் செய்வதை தவிர்க்கும் விதமாக இது 18 நாட்கள் வரை நீடிக்கும் நீண்ட பேட்டரி ஆயுளுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சியோமி ஹெப்பர்ஓஎஸ் மூலம் இயக்கப்படும், இந்த ஸ்மார்ட்வாட்ச், நமது தேவைக்கேற்ப செட் செய்யும் அறிவிப்புகளை வழங்குவதுடன், ஒவ்வொரு நாளின் அறிவிப்புகளையும் ஃபுளோட்டிங் நோட்டிஃபிக்கேஷன் மூலம் ஒழுங்குப்படுத்துகிறது. இது இந்தி மற்றும் பிற மொழிகளிலும் அறிவிப்புகளை வழங்கும் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க:
சியோமியின் முதல் 55 இன்ச் ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 அறிமுகம்… விலை விவரம்!
ஒட்டுமொத்தமாக, ரெட்மி வாட்ச் 5 லைட்டானது ஸ்டைல், செயல்பாடு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் ஒருங்கிணைத்து, ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் வலுவான போட்டியாளராக இடம்பிடித்திருக்கிறது.
.