ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் பேண்டுகள் (Fitness Tracker Bands) யூஸர்கள் ஆரோக்கியமாக இருக்க தங்களின் பல்வேறு ஆரோக்கிய அளவீடுகளை கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் இவை வழங்கும் தரவுகள் அனைத்துமே மிக துல்லியமானது என்று கூற முடியாது. எனினும் இவை உங்களை நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இந்த நவீன் டிவைஸ்கள் உதவ கூடும். இருப்பினும் நாட்டில் எண்ணற்ற வியரபிள் டிவைஸ்கள் தொடர்ந்து அறிமுகமாகி கொண்டே இருப்பதால், சரியான டிவைஸை தேர்ந்தெடுப்பது எளிதானது அல்ல.
அப்படி என்றால் ஃபிட்னஸ் ட்ராக்கரை வாங்கலாமா? அல்லது ஸ்மார்ட் வாட்ச்-ஐ வாங்கலாமா? என்பதை எப்படி தீர்மானிப்பது என்ற கேள்வி உங்களுக்குள் எழும். இங்கே உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட் சார்ந்து எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைத் தேர்வு செய்ய உதவும் வகையில் இந்த 2 டிவைஸ்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
வித்தியாசங்கள் என்ன?:
இவை இரண்டும் யூஸர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன மற்றும் தனித்துவமான செயல்பாடுகள் மற்றும் வடிவமைப்புகளை வழங்குகின்றன. ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் பேண்டுகள் பிரபலமானவை. ஆனால் இவை சற்று வித்தியாசமான தேவைகளையும் வாழ்க்கை முறைகளையும் பூர்த்தி செய்கின்றன.
ஸ்மார்ட் வாட்ச்:
ஸ்மார்ட் வாட்ச்கள் என்பவை ஃபிட்னஸ் டிராக்கிங்கிற்கு அப்பாற்பட்ட பல அம்சங்கள் நிறைந்த டிவைஸ்கள் ஆகும். சுருக்கமாக சொன்னால் இவை ஸ்மார்ட் ஃபோன்களின் எக்ஸ்டன்ஷன்களாக செயல்படுகின்றன, ஆப் சப்போர்ட், கால்ச மற்றும் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் ஸ்டாண்ட் அலோன் கனெக்டிவிட்டியை (eSIM வழியாக) வழங்குகின்றன. பெரிய டிஸ்ப்ளேகளுடன் இவை மல்டிமீடியா ப்ளேபேக், நேவிகேஷன் மற்றும் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை சப்போர்ட் செய்கின்றன. இவை கேஷுவல் மற்றும் ப்ரொஃபஷ்னல் செட்டிங்ஸ்களுக்கு ஏற்றதாக அமைகின்றன.
இதற்கான பிரபலமான எடுத்துக்காட்டுகளில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் அடங்கும். இருப்பினும், இவற்றின் மேம்பட்ட அம்சங்களுக்கு அதிக சக்தி தேவைப்படுவதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் பேட்டரி லைஃப் பொதுவாக 1-3 நாட்களுக்கு மட்டுமே வரும்.
– உங்கள் ஸ்மார்ட் போனின் எக்ஸ்டன்ஷனாக இருக்கும் வகையில் ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது, நோட்டிஃபிகேஷன்ஸ், கால்ஸ், ஆப்ஸ், மியூசிக் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டென்ட்டை வழங்குகிறது. இதன் ஹை-என்ட் மாடல்கள் எல்டிஇகனெக்டிவிட்டி போன்ற முழுமையான அம்சங்களை ஆதரிக்கின்றன.
– ஃபிட்னஸ் டிராக்கிங்கை உள்ளடக்கியது ஆனால் அட்வான்ஸ்ட் சென்சர்களுடன் பெரும்பாலும் விரிவானது. எடுத்துக்காட்டிற்கு ECG, SpO2 மற்றும் டெம்ப்ரேச்சர்.
– சிறந்த காட்சிகளுக்காக AMOLED ஸ்கிரீன்களுடன் இதன் டிஸ்ப்ளேக்கள் பெரிதாக வருகின்றன
– அம்சங்கள் அதிகம் இருப்பதால் இவற்றின் பேட்டரி ஆயுள் 1 – 3 நாட்களாக இருக்கிறது
– ஸ்மார்ட் வாட்ச்களின் ஸ்டைலானது நேர்த்தியான மற்றும் பெரும்பாலும் பாரம்பரிய கடிகாரங்களை ஒத்திருக்கிறது.
ஃபிட்னஸ் பேண்டுகள்:
ஃபிட்னஸ் பேண்டுகள் பட்ஜெட்ஃபிரெண்ட்லியானது. எவளவு ஸ்டெப் நடக்கிறோம், இதயத் துடிப்பு, தூக்கம் மற்றும் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் போன்ற அளவீடுகள் உட்பட உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்புக்கு இவை முன்னுரிமை அளிக்கின்றன. சிறிய டிஸ்ப்ளே மற்றும் குறைவான செயல்பாடுகளுடன், இவை நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகின்றன, பெரும்பாலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் இவற்றின் பேட்டரி லைஃப் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும்.
இவற்றின் லைட்வெயிட் மற்றும் ஸ்லிம் டிசைன் குறிப்பாக வொர்க்அவுட்டின் போது நீண்ட நேரம் பயன்படுத்த வசதியாக இருக்கும். Xiaomi Mi Band மற்றும் Fitbit Inspire போன்ற டிவைஸ்கள் இந்த வகையில் சிறந்தவை. சுருக்கமாக சொன்னால் ஸ்மார்ட் வாட்ச்கள் பல பயன்பாடுகளை கொண்டவை மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை ஈர்க்கின்றன. அதே சமயம் ஃபிட்னஸ் பேண்டுகள் எளிமை மற்றும் மலிவு விலையை விரும்பும் நபர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஆல்-இன்-ஒன் வசதியை நீங்கள் விரும்புறீர்களா அல்லது உடற்பயிற்சி கண்காணிப்பு வசதியை மட்டுமே நீங்கள் விரும்புறீர்களா என்பதைப் பொறுத்தே உங்கள் தேர்வு இருக்கும்.
– ஃபிட்னஸ் பேண்டுகள் யூசர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு கண்காணிப்பில் கவனம் செலுத்துகிறது. ஸ்டெப்ஸ், இதய துடிப்பு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறது. மேலும் நோட்டிஃபிகேஷன்கள் போன்ற வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பை கொண்டிருக்கின்றன.
– அடிப்படை சுகாதார கண்காணிப்பு அம்சங்களை மட்டுமே விருப்புவோருக்கு ஏற்றது. ஆனால் பிரீமியம் சென்சார்கள் இல்லை.
– இவற்றின் டிஸ்ப்ளே சிறியது மற்றும் quick glance-க்கு ஏற்றது.
– இவற்றின் பேட்டரி லைஃப் நீண்டது (7-14 நாட்கள் வரை)
– லைட்வெயிட்டானது மற்றும் ஸ்போர்ட்டியர், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஏற்றது
நீங்கள் எதை வாங்க வேண்டும்?:
ஸ்மார்ட்வாட்ச்கள் அம்சங்கள் நிறைந்தவை, ஆப்ஸ் சப்போர்ட், கால்ஸ் மற்றும் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் , மியூசிக் கன்ட்ரோல் மற்றும் ECG மற்றும் SpO2 போன்ற மேம்பட்ட சென்சார்களைப் பயன்படுத்தி சுகாதார கண்காணிப்புடன் ஸ்மார்ட்போன் எக்ஸ்டன்ஷன்களாக செயல்படுகின்றன. இவை பெரும்பாலும் பெரிய AMOLED டிஸ்ப்ளேக்கள் மற்றும் சாதாரண அல்லது தொழில்முறை அமைப்புகளுக்கு ஏற்ற நேர்த்தியான, வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டது போல இவற்றின் பேட்டரி லைஃப் ஃபிட்னஸ் பேண்டுகளின் பேட்டரி லைஃபை விட குறைவு.
ஃபிட்னஸ் பேண்டுகள் உடல்நலம் மற்றும் செயல்பாடு கண்காணிப்பு, ஸ்டெப்ஸ் மானிட்டரிங், இதய துடிப்பு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துகின்றன. இவை குறைந்தபட்ச வடிவமைப்புகள், சிறிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் (7-14 நாட்கள்) ஆகியவற்றுடன் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த இரண்டில் எதை தேர்வு செய்வது என்பது ஸ்டைலான வடிவமைப்புடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன் போன்ற டிவைஸிற்கு முன்னுரிமை அளிக்கிறீர்களா அல்லது நாள் முழுவதும் பயன்படுத்த வசதியாக இருக்கும் சிறிய மற்றும் மலிவு விலையிலான சுகாதார கண்காணிப்பு அம்சங்களுகென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஃபிட்னஸ் டிராக்கிங்கை பயன்படுத்த விரும்புகிறீர்களா என்பதை பொறுத்தது.
.