ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்க திட்டமிட்டிருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு appeared first on Daily Ceylon.