ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The post ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகுமாறு தயாசிறிக்கு அழைப்பு appeared first on Daily Ceylon.