சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25ஆவது திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இணைந்து நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருந்த புறநானூறு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான டாய்ன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

விளம்பரம்

குறிப்பாக இப்படத்தில் ஜெயம் ரவி இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். படத்தின் கதை, இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றியது என கூறப்படும் நிலையில், படத்தின் அறிவிப்பிலேயே “வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றுள்ளது.

விளம்பரம்

பல நாட்களாக பேசப்பட்ட இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 100ஆவது திரைப்படமாகவும் அமையவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.





Source link