இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி கடந்த 7ம் தேதியோடு ஒரு வருடம் ஆகிய நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.

விளம்பரம்

முதலில் கடந்த 6ம் தேதி இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 7ம் தேதி இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா (Haifa) மற்றும் டைபிரியாஸ் (Tiberias) மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியது.

இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கின. இதில், ஹைபா நகரில் நடைபெற்ற தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும், 10 பேர் காயமடைந்தனர். ஹைபா நகரில் உள்ள ராணுவ தளம் உட்பட இரண்டு இடங்கள் மற்றும் டைபிரியாஸ் நகரில் ஐந்து இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன? – அசாமில் பரபரப்பு!

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சுரங்கப்பாதை வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், இரும்பு கதவுகள் கொண்ட அறை, ஏ.கே.47 துப்பாக்கிகள், படுக்கை அறை, கழிவறை, ஜெனரேட்டர்களின் சேமிப்பு அறை, தண்ணீர் தொட்டிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை இருந்தன. இது வெளியாகி பெரும் கவனம் பெற்றுவந்தது.

இந்நிலையில் இன்று, இஸ்ரேல் ராணுவம் காசாவில் மேற்கொண்ட ஆப்ரேஷனில் ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் சொல்லியுள்ளது.

விளம்பரம்

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது காசா நடத்திய திடீர் தாக்குதல் திட்டத்தின் முக்கிய நபராக யஹ்யா சின்வர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த குடியிருப்பினுள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் :
ஹிஸ்புல்லா சுரங்கத்தில் இது எல்லாம் இருக்கா? – இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம், “இஸ்ரேல் ராணுவம் இன்று காசாவில் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுள்ள மூன்று தீவிரவாதிகள் குறித்தும் இஸ்ரேல் ராணுவம் விசாரித்துவருகிறது. அந்த மூவரில், ஒருவர் யஹ்யா சின்வராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

விளம்பரம்

ஆனால், இன்னும் ஹமாஸ் தரப்பில் இருந்து கொல்லப்பட்டவர்கள் குறித்தும், அதில் ஒருவர் யஹ்யா சின்வர் என்றோ ஏதும் சொல்லவில்லை. ஒருவேளையில் கொல்லப்பட்டவர்களில் ஹமாஸின் முக்கிய தலைவரான யஹ்யா சின்வரும் இருந்தால் அது, இஸ்ரேலிய ராணுவத்திற்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் பெரிய கொண்டாட்டம் என இஸ்ரேலிய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

.



Source link