ஹவாய் நிறுவனம் அதன் புதிய அல்ட்ரா-பிரீமியம் GT5 ஸ்மார்ட்வாட்சை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்வாட்சில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு வசதிகள், 100க்கு மேற்பட்ட ஒர்க்அவுட் மோட்கள், சேட்டிலைட் பேஸ்ட் GNSS ட்ராக்கிங் மற்றும் யூனிக் எமோஷனல் வெல்பீயிங் அசிஸ்டன்ட் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹவாய் GT5 ஸ்மார்ட்வாட்ச் ஆண் மற்றும் பெண் வேரியண்ட்க்கு 466 x 466 பிக்சல்கள் ரெசலூஷன் கொண்டது, ஆண் வேரியண்ட்க்கு 352 PPI மற்றும் பெண் வேரியண்ட்க்கு 326 PPI கொண்டுள்ளது. ஹவாய் GT5 சீரிஸில் யூசரின் எமோஷனல் ஸ்டேஜ்-ஐ பொறுத்து மாறும் 11 புதிய வாட்ச் ஃபேஸ் தீம்கள் உள்ளன. இது தவிர, அக்டிவிட்டி ரிங் 2.0, 100 க்கும் மேற்பட்ட ஒர்க்அவுட் மோட்கள் மற்றும் புதிய ஹவாய் ட்ரூசென்ஸ் டெக்னாலஜி ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹவாய் GT5 ஆனது 50 மீட்டர் வரை நீரை எதிர்க்கும் திறன் கொண்டது, எனவே இது மழைக்காலத்திற்கு ஏற்றதாக அமைகிறது.
இது மட்டுமல்லாமல், விரைவான பதில்களுக்கான புதிய செலியா கீபோர்டு, கஸ்டமைஸ்ட் இன்டர்ஃபேஸ், வாட்ச் ஸ்கிரீன்ஷாட் ஃபேசிலிட்டி, புளூடூத் கால்லிங் மற்றும் ஆப் கேலரியில் இருந்து அப்ளிகேஷன் டவுன்லோட் ஆகியவையும் இதில் அடங்கும். கூடுதலாக, ஹவாய் GT5 ஸ்மார்ட்வாட்சில் மேம்படுத்தப்பட்ட ட்ரூசென்ஸ் டெக்னாலஜி கொண்டுள்ளது, இது துல்லியமான உடல்நல கண்காணிப்பை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஹார்மனி ஆப் ஆனது யூசர்களை நேரடியாக வாட்சிலிருந்து ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க அனுமதிக்கிறது.
இதையும் படிங்க : புதிய லுக்கில் ஹைடெக் மாடல்களை களத்தில் இறக்கும் ஜியோ… விலை மற்றும் அம்சங்கள்
இந்த வாட்ச் ஆனது 46mm மற்றும் 41mm ஆகிய இரண்டு எடிஷன்களில் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இரண்டு வகைகளும் AMOLED ஸ்கிரீன் உடன் வருகின்றன. ஆண்களுக்கான 46mm எடிஷன் ஆனது ப்ளூ, பிரவுன் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது மற்றும் பெண்களுக்கான 41mm எடிஷன் ஆனது வைட், பிரவுன், ப்ளூ, கோல்ட் மற்றும் பிளாக் ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஹவாய் GT5 ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.18,999 விலையில் தொடங்குகிறது மற்றும் பிளிப்கார்ட் இணையதளம் வழியாக பிரத்தியேகமாக விற்பனையில் கிடைக்கும்.
இந்த வாட்சில் ஆக்சிலரோமீட்டர் சென்சார், கைரோஸ்கோப் சென்சார், மேக்ரோடோமீட்டர் சென்சார், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பாரோமீட்டர் சென்சார், டெம்பரேச்சர் சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் புளூடூத் அழைப்பிற்கான ஸ்பீக்கர் மற்றும் மைக் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்களை சமீபத்திய iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களுடன் எளிதாக இணைக்க முடியும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
.