Last Updated:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையொட்டி கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று லைக்ஸை குவித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையொட்டி கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார்கள். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன.
இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தது. கடைசியாக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன.
நான்காவது டெஸ்ட் போட்டி 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வாய்ப்பை பெற முடியும். இதனால் இந்த போட்டிகளின் மீது இந்திய அணி வீரர்கள் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள விராட் கோலி தனது ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளார். அவர் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜோர்டான் டபக்மேன் என்பவரிடம் தனது ஹேர் ஸ்டைலை சற்று மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக ஜோர்டான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை குவித்து வருகிறது.
முன்னதாக இதே நபரிடம் 2022 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது விராட் கோலி ஹேர் கட் செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன் ஆகியோரும் இதே ஜோர்டான் டபக்மேனிடம் தங்களது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டனர்.
December 21, 2024 4:23 PM IST