வழக்கமான மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்புகளை ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கம். பிற மார்க்கெட்டுடன் இணைக்கப்பட்டுள்ள திட்டங்களோடு ஒப்பிடுகையில் இது அவர்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைக்கிறது. அதே நேரத்தில் நிலையான மற்றும் உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களை இந்த திட்டம் அவர்களுக்கு வழங்குகிறது.
பொதுவான சிட்டிசன்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை வங்கிகள் கொடுக்கின்றன. பொதுவாக 1, 3 மற்றும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட்கள் முதலீட்டாளர்களிடையே பிரபலமாக அமைகிறது. 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டம் 1961-இல் உள்ள பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
குறுகிய கால ரிட்டனை எதிர்பார்க்கும் சீனியர் சிட்டிசன்கள் ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்யலாம். 4 லட்சம், 8 லட்சம் மற்றும் 12 லட்சம் ரூபாயை ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, கனரா வங்கி ஆகியவை சீனியர் சிட்டிசன்களுக்கு எவ்வளவு ரிட்டன் தருகின்றன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
SBI 1- வருட FD: சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
SBI வங்கி ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 7.30 சதவீத வட்டியை வழங்குகிறது.
HDFC வங்கி 1- வருட FD: சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது.
கனரா வங்கி 1 – வருட FD: சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம்
இந்த பொதுத்துறை வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35% வட்டியை கொடுக்கிறது.
SBI: 1-வருட FD: 4 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு வருட காலம் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 30,000.12 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகை 4,30,000.12.
SBI: 1-வருட FD: 8 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு வருட காலம் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 60,018.24 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகை 8,60,018.24.
SBI: 1-வருட FD: 12 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு வருட காலம் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 90,027.36 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகை 12,90,027.36.
HDFC: 1-வருட FD: 4 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு வருட காலம் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 29,165.14 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகை 4,29,165.14.
HDFC: 1-வருட FD: 8 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு வருட காலம் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 58,330.27 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகை 8,58,330.27.
இதையும் படிக்க:
பர்சனல் லோன் வாங்குவதற்கு என்னென்ன எலிஜிபிலிட்டி இருக்க வேண்டும்?
HDFC: 1-வருட FD: 12 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு வருட காலம் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 87,495.41 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகை 12,87,495.41.
கனரா வங்கி 1- வருட FD: 4 லட்சம் ரூபாய்க்கான முதலீடு
ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு திட்டத்தில் 4 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது கனரா வங்கி 30,220.31 ரூபாயை ரிட்டன் ஆகவும், 4,30,220.31 ரூபாயை மெச்சூரிட்டி தொகையாகவும் வழங்குகிறது.
கனரா வங்கி 1- வருட FD: 8 லட்சம் ரூபாய்க்கான முதலீடு
ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு திட்டத்தில் 8 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது கனரா வங்கி 60,440.62 ரூபாயை ரிட்டன் ஆகவும், 8,60,440.62 ரூபாயை மெச்சூரிட்டி தொகையாகவும் வழங்குகிறது.
இதையும் படிக்க:
SBI vs PNB: 3 வருட ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒரு ஒப்பீடு!!!
கனரா வங்கி 1- வருட FD: 12 லட்சம் ரூபாய்க்கான முதலீடு
ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு திட்டத்தில் 12 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது கனரா வங்கி 90,660.93 ரூபாயை ரிட்டன் ஆகவும், 12,90,660.93 ரூபாயை மெச்சூரிட்டி தொகையாகவும் வழங்குகிறது.
.