Last Updated:
ரியல்மி 14 ப்ரோ 5ஜி மாடலின் முக்கிய சிறப்பம்சமாக இதன் நிறம் மாறும் பேக் பேனல் டிசைன் பார்க்கபடுகிறது.
ரியல்மி 14ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் உறுதி செய்யப்பட்டுள்ள சில சிறப்பம்சங்களை பற்றி இப்போது பார்ப்போம்:
எக்ஸ் வலைத்தளத்தில் ரியல்மி நிறுவனம் தன்னுடைய ரியல்மி இந்தியா வலைபக்கத்தில் ரியல்மி 14ப்ரோ 5ஜி பற்றிய டீசரை வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் வெளியிட்டுள்ளபடி ரியல்மி 14ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 1.5k அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மல்டிமீடியா யூசர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்பதை உறுதிபட கூறலாம். இதன் டிசைனை பொருத்தவரை 1.6mm அளவிலான பெசல்ஸ், 42 டிகிரி கர்வேச்சர் மற்றும் 3840Hz டிம்மிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் மொபைல் பார்க்கும் போது கண்களுக்கு எற்படக்கூடிய அசவுகரியம் வெகுவாக குறைக்கப்படும்.
பேட்டரியை பொருத்தவரை 6000mAh கொள்ளளவுடைய அதிக திறன்வாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. வேகன் லெதர் ஃபினிஷ் – உடன் கூடிய சூயட் க்ரே நிறத்தில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. மேலும் தண்ணீரினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கக் கூடிய வகையிலான ஐபி16 ரேட்டிங் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.
நிறம் மாறும் டிசைன்
ரியல்மி 14 ப்ரோ 5ஜி மாடலின் முக்கிய சிறப்பம்சமாக இதன் நிறம் மாறும் பேக் பேனல் டிசைன் பார்க்கபடுகிறது. சமீபத்தில் நடந்த ஊடக விழா ஒன்றில் அந்நிறுவனம் இந்த அசத்தலான டிசைனை அறிமுகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலானது வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒரு நிறத்திலும், வெப்பநிலை குறையும் போது தானாகவே வேறு ஒரு நிறத்திற்கு மாறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாதரணமாக பேர்ல் வைட் (Pearl White) நிறத்தில் இருக்கும் இந்த மொபைலின் பேக் பேனல் 16 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே குறையும் போது வைப்ரன்ட் ப்ளூ (Vibrant Blue) நிறத்திற்கு மாறிவிடும். மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் பேக் பேனல் தன்னுடைய உண்மையான நிறத்திற்கு மாறிவிடும். இந்த பேர்ல் வைட் ஃபினிஷ் (Pear White Finish) என்ற நிறத்தை பெறுவதற்கு உயிரியல் அடிப்படையிலான மெட்டீரியல்கள் கொண்டு 30 படிநிலைகள் கொண்ட ஃபியூஷன் ஃபைபர் ப்ராசஸ் என்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
December 31, 2024 10:08 PM IST