Last Updated:

ஒருபோதும் ஜங்க் ஃபுட் அல்லது சர்க்கரை நிறைந்த பானங்களை குடிப்பது கிடையாது

News18

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்த தகவல்களை அவரது மனைவி அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளார். இந்த தகவல்கள் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின், தோனிக்கு அடுத்தபடியாக அதிகம் கொண்டாட கூடிய கிரிக்கெட் வீரராக விராட் கோலி இருந்து வருகிறார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைத்த விராட் கோலி இந்தியாவின் ஃபிட்னஸ் அடையாளங்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் விராட் கோலியுடைய ஃபிட்னஸ் வர்ணனையாளர்களால் அதிக முறை பாராட்டப்பட்டுள்ளது. சாதாரண கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் உடல் தகுதியையும் தாண்டி ஒரு தடகள வீரரை போன்று விராட் கோலி களத்தில் செயல்பட்டு வருகிறார். பலரும் விராட் கோலியை தங்களது ஃபிட்னஸ் முன்மாதிரியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா நேர்காணல் ஒன்றில் பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது- “உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் என வந்துவிட்டால் விராட் கோலி மிகவும் கட்டுக்கோப்பாக சுய ஒழுக்கத்துடன் செயல்படுவார். சினிமா துறையிலும் இந்த பழக்கம் அதிகரித்து வருவதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரமாக விழித்து கார்டியோ பயிற்சியை விராட் கோலி மேற்கொள்வார்.

இதையும் படிங்க – யு 19 ஆசிய கோப்பை தொடர் : 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரன்கள் குவிப்பு… ராஜஸ்தான் அணி ரசிகர்கள் உற்சாகம்

அதன் பின்னர் என்னுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். உணவு கட்டுப்பாட்டில் மிகுந்த ஒழுக்கத்தை அவர் பின்பற்றுகிறார். அவர் ஒருபோதும் ஜங்க் ஃபுட் அல்லது சர்க்கரை நிறைந்த பானங்களை குடிப்பது கிடையாது. சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்… அவர் பட்டர் சிக்கன் சாப்பிட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது! உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை தவிர்த்து ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 மணி நேரம் விராட் கோலி தூங்குவார். இதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார்.

இந்த ஆழ்ந்த தூக்கம் அவரை ஆக்டிவாக வைத்திருக்க உதவுகிறது. தூக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் உலக தரம் மிக்க செயல்பாட்டை கடைபிடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார். இந்த சுய ஒழுக்கம் தான் அவரை பலருக்கும் ரோல் மாடல் ஆக்கி உள்ளது” என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.





Source link