பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதன் Airtel Black பிராட்பேண்ட் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் சப்ஸ்கிரைபர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் பல்வேறு வகையான திட்டங்களை அளித்து வருகிறது. எனினும் இந்த திட்டங்களில் 899 ரூபாய்க்கு கிடைக்கும் ஏர்டெல் பிளாக் பிளான் என்பது சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஒரு மாத வேலிடிட்டியுடன் 100MBps பிளான் கொண்ட வைஃபை கனெக்சன் மற்றும் DTH இணைப்பை இலவசமாக வழங்குகிறது.

இந்தத் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சத்தையும் வழங்குகிறது. எனினும் இதில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால் இது வயர்லெஸ் இணைப்பு இல்லாதது. மேலும் இது லேண்ட்லைன் இணைப்புத் திட்டம் என்பதால் இதற்கான உபகரணங்களை தனியாக வாங்குவதற்கு நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

விளம்பரம்

கூடுதலாக வரிகள் சேர்க்கப்பட்ட பின்னர் தொலைதொடர்பு நிறுவனங்கள் அவற்றின் பல்வேறு பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஏர்டெல் பிளாக் திட்டத்தின் விலை மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

Airtel பிளாக் ₹899 திட்டம்

899 ரூபாய்க்கு பாரதி ஏர்டெல் 100 MBps வேகம் வரையிலான திட்டத்தை வழங்குகிறது. இதனோடு சேர்த்து ஹை ஸ்பீட் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களையும் நீங்கள் பெறுகிறீர்கள். இந்த பிளான் அன்லிமிடெட் என்ற விளக்கத்தை அளித்தாலும் 3.3 TB என்ற மொத்த டேட்டா லிமிட்டை அடைந்தவுடன் டேட்டா வேகமானது குறைக்கப்படும். மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அன்லிமிடெட் கால்கள் என்பது லேண்ட் லைன் இணைப்பு மூலமாக வழங்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
அதிரடியாக விலை குறைக்கப்பட்ட ஹானர் 200 ப்ரோ 5ஜி மொபைல்!

அதே நேரத்தில் சப்ஸ்கிரைபர்களுக்கு 350 ரூபாய் மதிப்பிலான சேனல்கள் கொண்ட DTH இணைப்பும் இந்த திட்டத்தோடு கிடைக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை தவிர கஸ்டமர்கள் இத்திட்டத்துடன் OTT பலன்களையும் பெறுகிறார்கள். Disney + Hotstar மற்றும் Airtel Xstream அப்ளிகேஷன் போன்ற OTT பிளாட்பார்ம்களை இந்த திட்டம் மூலமாக நீங்கள் பயன்படுத்தலாம்.

899 ரூபாய் திட்டமானது மொபைல் இணைப்பை வழங்காது. அனைத்து பிராட்பேண்ட் பலன்களுடன் சேர்த்து OTT பலன்களை ஒரே திட்டத்தின் மூலமாக பெற நினைக்கும் சப்ஸ்க்ரைபர்களுக்கு இந்த ஏர்டெல் பிளாக் பிளான் சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் DTH மற்றும் பிராட்பேண்ட் இணைப்புக்கு தனித்தனியாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.9,499 விலையில் தியேட்டர் எஃபக்ட் ஸ்பீக்கர்கள்… இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் தெரியுமா?

அதுமட்டுமின்றி இந்த திட்டத்தோடு மொபைல் இணைப்பையும் சேர்ப்பதற்கான வாய்ப்பையும் ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. அதுவும் ஒரே பில்லின் கீழ் சேர்க்கப்படும். அது மேலும் ஏர்டெல் பிளாக் கஸ்டமர்கள் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து முன்னுரிமையில் ஆதரவு பெறுவார்கள்.

.



Source link