108 வருட பழமையான சோப் நிறுவனம் குறித்த, ஆனந்த் மஹிந்திராவின் ஏக்கமான எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

100 சதவீதம் சந்தன எண்ணெயை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே சோப்பு என்று கூறப்படும் மைசூர் சாண்டல் சோப் 1916 முதல் கிடைக்கிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்திய தனது எக்ஸ் பதிவில், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கும், பாரம்பரிய பிராண்டான மைசூர் சாண்டல் சோப்பைப் பாராட்டினார். தூய சந்தன எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பிரபலமான சோப்பு, 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய குடும்பங்களில் பிரதானமாக உள்ளது.

விளம்பரம்

அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் நிலையான தேவையை பூர்த்தி செய்ய, தினமும் சுமார் 10 முதல் 12 லட்சம் சோப்புகளை உற்பத்தி செய்கிறது. எம்எஸ் தோனி ஒரு காலத்தில் சோப் பிராண்டின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.

சோப்பின் உற்பத்தி முறையைக் காண்பிக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, “இந்த வீடியோவைப் பார்த்ததும் ஏக்கத்தால் மூழ்கினேன், நிறுவனம் இவ்வளவு காலம் நிலையாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதை மீண்டும் வாங்கி பாரம்பரியமான நறுமணத்தை சுவாசிக்கப் போகிறேன்.

விளம்பரம்

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ, பெங்களூருவைச் சேர்ந்த கன்டண்ட் கிரியேட்டரான ஷிவா ராய் என்பவரால் உருவாக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில், இந்த வீடியோ 23.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பதிவு ஏற்கனவே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

விளம்பரம்

அந்த பதிவுக்கு பதிலளித்த ஒரு பயனர், “உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை (xenoestrogens) எதிர்மறையாக பாதிக்கும் எந்த இரசாயனமும் இல்லாமல் கிடைக்கும் சிறந்த சோப்புகளில் ஒன்று மைசூர் சாண்டல். ஒவ்வொரு இந்தியனும் அதனை ஒருமுறையாவது முயற்சிக்க வேண்டும்.! ” மற்றொருவர், “இது சந்தையில் கிடைக்கும் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும், இதற்கு இணையான ஒரு சோப்பை இதுவரை யாரும் தயாரிக்கவில்லை. அதற்காக செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்புள்ளது.”

விளம்பரம்
ஜூஸ் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா.?


ஜூஸ் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா.?

இன்னொருவர், “இது தனித்துவமானது, பழங்கால, மைசூர் மகாராஜா தனது விஞ்ஞானியை இங்கிலாந்துக்கு சோப்பு தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய அனுப்பினார், பின்னர் இந்த தொழிற்சாலையை நிறுவினார். 60-களில் இருந்து, இது நல்ல வாசனையுடன் கூடிய குடும்பங்கள் பயன்படுத்தும் சோப்பாக இருந்து வருகிறது. இந்த தொழிற்சாலை பாதுகாக்கப்பட்டு, அதன் தயாரிப்புகள் இந்தியாவிலும், உலக அளவிலும் விற்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மார்ச் 2023 இல், முன்னாள் பாஜக எம்எல்ஏவும், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் (கேஎஸ்டிஎல்) தலைவருமான மதல் விருபக்ஷப்பாவின் மகனான பிரசாந்த் மடல் நிறுவத்தின் ஒப்பந்தத்திற்கான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அரசு நடத்தும் நிறுவனத்தின் மீது கவனம் திருப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.





Source link