டெக்னோ நிறுவனம் தனது புதிய மலிவு விலை 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த மாடலில் மக்களை உற்சாகப்படுத்தக்கூடிய AI அம்சங்கள் மற்றும் 108 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்களும் அடங்கியுள்ளது.

டெக்னோ தனது புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனான போவா 6 நியோவை இந்தியாவில் AI அம்சங்கள் மற்றும் அதீத சென்சார் கேமராவுடன் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் மைன்சிட்டி சிப்செட் பிராசசர் மற்றும் அதீத டிஸ்ப்ளே ரெப்ரேஷ் ரேட்டுடன் வந்துள்ளது. மேலும் டெக்னோ நாட்டிலுள்ள தனது பயனர்களுக்கு முற்றிலும் புதிய பிரிவில் AI அம்சங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

டெக்னோ போவா 6 நியோ AI விலை:

டெக்னோ போவா 6 நியோ விலை 6GB + 128GB க்கு ரூ.11,999 இல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8GB + 256GB மாடலின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமேசான் இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வருகிற செப்டம்பர் 14 முதல் விற்பனைக்கு வருகிறது. போவா 6 நியோ ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

டெக்னோ Pova 6 நியோ சிறப்பம்சங்கள்:

6.67-இன்ச் HD+ (720×1,600 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளேயுடன், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14.5 இல் இயங்குகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்கும். அதிகபட்சமாக 8GB வரை RAM மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 1TB எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வரை இதனை விரிவாக்கிக் கொள்ளலாம்.

18W சார்ஜிங் வேகத்துடன், 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 192.3 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஸ்பிளாஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆகியவற்றிற்காக IP54 ரேட்டிங்கை பெற்றுள்ளது. டால்பி அட்மாசுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரின்ட் சென்சாருடன் வருகிறது.

விளம்பரம்

AI அம்சத்துடன் இயங்கும் 108 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் 3x வரையிலான சென்சார் ஜூம் வசதியை கொண்டுள்ளது. தெளிவான செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது. பின்புற கேமராவில் சூப்பர் நைட் மோட், டைம் லேப்ஸ், வ்லாக் மற்றும் டூயல் வீடியோ போன்ற புகைப்பட வசதிகளும் இடம்பெற்றுள்ளது.

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இது ஜெனரேட்டிவ் AI அம்சங்களை குறைவான விலையில் வழங்குகிறது. இந்த அம்சங்களில் AIGC போர்ட்ரெய்ட், AI மேஜிக் எரேசர், AI கட்அவுட், AI வால்பேப்பர், AI ஆர்ட்போர்ட் மற்றும் Ask AI ஆகியவை அடங்கும். போவா 6 நியோ 5G, டூயல் 4G VoLTE, ஒய்-ஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விளம்பரம்

.



Source link