Last Updated:

ஒரு குழந்தையை வளர்க்கவே பெற்றோர் விழிபிதுங்கி நிற்கும் இந்தக் காலத்தில் உகாண்டாவைச் சேர்ந்த ஒருவர் 12 பேரைத் திருமணம் செய்து 100 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

News18

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது மாறி ஒரே ஒரு குழந்தை போதும்பா. என்ற நிலைக்கு பெரும்பாலானோர் சென்றுவிட்டனர். ஆனால், உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒருவரோ 100 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

கிழக்காசிய நாடான உகாண்டா பல வித்தியாசமான கலாச்சாரத்தைக் கொண்டது. அங்கு சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலதார திருமணம் செய்துக்கொள்ள அனுமதி உண்டு. பொதுவாக ஒன்றிரண்டு திருமணங்களைச் செய்த பல ஆண்களை அங்கு பார்க்க முடியும். ஆனால், முசா ஹசாஹ்யா என்ற இந்த நபர் 12 பேரைத் திருமணம் செய்துள்ளார்.

1972-ல் வெறும் 17 வயதில் இவருக்கு முதல் திருமணம் நடந்தது. முசாவின் தந்தைக்கு இரண்டே பிள்ளைகள் தான். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வளர்ந்த இவர், பின்னர் விவசாயம் மற்றும் மாட்டிறைச்சி விற்று லாபம் கண்டு வந்துள்ளார். இதனால், தனக்குப் பெண் கொடுக்க பலர் முன்வந்ததால் அடுத்தடுத்துத் திருமணம் செய்துக்கொண்டதாக அவர் கூறுகிறார். இவரது மனைவிகள் உகாண்டாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசுபவர்கள்.

முசாவுக்குத் தற்போது 70 வயதாகி விட்டது. ஒவ்வொரு மனைவியும் சராசரியாக 9 குழந்தைகள் பெற்றெடுத்தனர். 102-வது குழந்தை பிறந்த பின் தான்.. கொஞ்சம் ஓவரா தான் போறோமோ என முசாவுக்குத் தோன்றி உள்ளது. இனி யாரையும் திருமணம் செய்யக் கூடாது.. குழந்தையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என அவர் முடிவு செய்த போது, அவரது குழந்தைகளுக்குத் திருமணமாகி அவர்களும் குழந்தைகளைப் பெற்றுவிட்டனர்.

தற்போது முசாவுக்கு 578 பேரக் குழந்தைகள் உள்ளனர். முசாவின் கடைசி மனைவியை விட அவரது பேரக் குழந்தைகள் சிலர் வயதில் பெரியவர்களாம்.. குழந்தைகள், பேரக்குழந்தைகளின் பெயர்களை நியாபகம் வைத்துக்கொள்ள முடியாததால், அதற்காகத் தனிப் பதிவேட்டை முசா பயன்படுத்தி வருகிறார். முதுமையடைந்துவிட்ட முசா, தற்போது குடும்பத்தை நடத்தப் போதுமான பணம் இல்லாமல் ஏழ்மையில் இருப்பதாகக் கூறுகிறார்.

ஏழ்மையான சூழல் என்றாலும் ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியாகத் தான் கடப்பதாகக் கூறுகின்றனர் முசாவின் மனைவிகளும் குழந்தைகளும்.



Source link