Last Updated:

தென் கொரியாவிலிருந்து வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கை, ஐபோன் 17 சீரிஸில் இடம்பெற உள்ள அனைத்து மாடல்களும் அதிக ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய LTPO (லோ-டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைட்) ஸ்கிரீனுடன் அறிமுகமாகும் என கூறி இருக்கிறது.

News18

சமீபத்தில்தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு இரண்டாம் பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 17 சீரிஸ் குறித்த தகவல்கள் தற்போதே கசிந்த வண்ணம் உள்ளன.

இந்த சீரிஸில் ஐபோன் 17 ஏர் என்ற புதிய மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்ற யூகங்கள் உள்ளன. இந்த நிலையில் தென் கொரியாவிலிருந்து வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கை, ஐபோன் 17 சீரிஸில் இடம்பெற உள்ள அனைத்து மாடல்களும் அதிக ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய LTPO (லோ-டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைட்) ஸ்கிரீனுடன் அறிமுகமாகும் என கூறி இருக்கிறது.

இது நிறுவனத்தின் முந்தைய ஐபோன் சீரிஸ்களை ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். ஆப்பிள் வழக்கமாக ஹை-ரெஃப்ரஷ் ரேட் ஸ்கிரீன்களை அதன் ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கும். சமீபத்தில் வெளியான ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் கூட 60Hz ஹெர்ட்ஸ் பேனலை மட்டுமே கொண்டுள்ளது.

ஐபோன் 17 சீரிஸின் அனைத்து மாடல்களுக்கும் 120Hz ப்ரொமோஷன் டிஸ்ப்ளே!!

இன்டஸ்ட்ரி சோர்ஸ்களை மேற்கோள்காட்டி ETNews வெளியிட்டுள்ள தகவலானது iPhone 17 சீரிஸில் இடம்பெற உள்ள அனைத்து மாடல்களும் Samsung மற்றும் LG-யிலிருந்து பெறப்பட்ட LTPO ஸ்கிரீன்களை கொண்டிருக்கும் என கூறியுள்ளது. முன்னரே கூறியபடி ஹை 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டிருக்கும் LTPO ஸ்கிரீன் டெக்னாலஜியானது தற்போது நிறுவனத்தின் ஹை-என்ட் டிவைஸாக உள்ள ப்ரோ மாடலுக்கென்று பிரத்தியேகமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த டெக்னாலஜியானது ஸ்க்ரோலிங் செய்யும்போது, ​​அனிமேஷன்களைப் பார்க்கும்போது மற்றும் கேம்ஸ்களை விளையாடும்போது ஸ்கிரீனின் ஸ்மூத்னஸ் & ரெஸ்பான்ஸிவ்னஸை கணிசமாக அதிகரிக்கிறது. ஐபோன் 17 சீரிஸின் டிஸ்ப்ளேக்கள் பற்றி நாம் கேள்விப்படுவது இது முதல்முறை அல்ல. 2025ஆம் ஆண்டில் அறிமுகமாக உள்ள அனைத்து ஐபோன் மாடல்களும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும். இதில் ப்ரோ மாடல் அல்லாத டிவைஸ்களும் அடங்கும் என ஏற்கனவே Display Supply Chain Consultants-ஐ சேர்ந்த ரோஸ் யங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தயாரிப்பு விலையை விட அதிக விலைக்கு பிக்சல் 9 ப்ரோவை இந்தியாவில் விற்கும் கூகுள் – காரணம் என்ன?

எப்போது முதல்….!

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் அதன் ப்ரோ ஐபோன் மாடல்களில் ProMotion டிஸ்ப்ளேக்கள் என பிராண்டட் செய்யப்பட்ட120Hz ஸ்கிரீன்களை வழங்குகிறது. இது ஆல்வேஸ் ஆன்-டிஸ்ப்ளே அம்சத்தையும் செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ள ஐபோன் 16 மொபைலானது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதே நேரம் ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இவை 60Hz-ஐ சப்போர்ட் செய்கின்றன. இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே 6.3 இன்ச் மற்றும் 6.9 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இவை120Hz ரெஃப்ரஷ் ரேட்டை (ProMotion) சப்போர்ட் செய்கின்றன.

இதையும் படிக்க: ஹை-ஸ்பீட் இன்டர்நெட்டிற்காக ரூ.11 டேட்டா பேக்… ஜியோ நிறுவனம் அதிரடி…!!

இதனிடையே ஆப்பிள் அடுத்த ஆருடம் அறிமுகப்படுத்த உள்ள ஐபோன் 17 சீரிஸில் பிளஸ் மாடலுக்கு பதிலாக புதிதாக ‘ஸ்லிம்’ அல்லது “ஏர்” என்றார் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் 12GB ரேம் உடன் ஆப்பிளின் ஏ19 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஸ்டாண்டர்ட் iPhone 17 மற்றும் iPhone 17 Air ஆனது A18 அல்லது A19 சிப்பில் 8GB RAM ஆதரவுடன் இயங்கும் என்றும் ஐபோன் 17 சீரிஸில் இடம்பெற உள்ள அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் 24MP ஃப்ரன்ட் ஃபேசிங் கேமரா இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link