Last Updated:

ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

வைபவ் சூர்யவன்ஷி – ஆயுஷ் மாத்ரே

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில்13 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ரன்கள் குவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே 20 ஓவர் போட்டியைப் போன்று அதிரடியாக ரன்கள் குவித்தனர்.

இதையும் படிங்க – 7 சிக்சர்கள்..! 191 ஸ்ரைக் ரேட்..! சூர்ய குமாரை எதிரில் வைத்து ருத்ரதாண்டவம் ஆடிய சிஎஸ்கே வீரர்…

சூர்யவன்ஷி 46 பந்துகளில் 76 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 67 ரன்களும் எடுக்க 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியதுடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷியின் திறமையான பேட்டிங் முக்கிய காரணம் என்பதால் அவரை ஏலத்தில் எடுத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களும், நிர்வாகத்தினரும் உற்சாகத்தில் உள்ளனர்.



Source link