இந்திய திருமணங்கள் மற்றும் பாரம்பரிய உடைகளுக்கு இடையே இருக்கும் தொடர்பு பிரிக்க முடியாதது. பாரம்பரிய உடைகள் என்றாலே நமக்கெல்லாம் நியாபகத்திற்கு வரும் ஒரு பெயர் மான்யவர் (Manyavar). இந்த ஐகானிக் பிராண்டை கட்டியெழுப்பியவர் ரவி மோடி. அவர் தனது நிறுவனமான வேதாந்த் ஃபேஷன் மூலம் பாரம்பரிய இந்திய ஃபேஷன் துறையில் ஒரு பேரரசை உருவாக்கியுள்ளார்.

2002ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட வேதாந்த் ஃபேஷன்ஸ் நிறுவனம், மன்யவர், மோஹே, மந்தன், மெபாஸ் மற்றும் த்வாமேவ் போன்ற பிரபலமான பிராண்டுகளை தன் கீழ் வைத்திருக்கிறது. ரவி மோடியின் தலைமையின் கீழ், இந்நிறுவனம் புதிய உயரங்களை எட்டியது. அதுமட்டுமின்றி 2022-ல் லாபகரமான பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் வெற்றிக் கதையாகவும் மாறியது. இந்த சாதனைகள் அனைத்தும் பிராண்டின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் மோடியையும் சேர்த்தது.

விளம்பரம்

ரவி மோடியின் தொழில்முனைவோர் பயணம் மிகவும் எளிமையாகவே தொடங்கியது. 13 வயதில், அவர் தனது தந்தையின் துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தபோது, இந்த வணிகத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டார். பின்னர் சில வருடங்கள் கழித்து, சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக தனது தாயிடம் ரூ.10,000 கடன் வாங்கினார்.

இந்த குறைவான தொகையை வைத்துக்கொண்டு, இந்திய பாரம்பரிய ஆடைகளை உற்பத்தி செய்வதிலும், அதை பெரிய நகரங்களுக்கு கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வேதாந்த் ஃபேஷனுக்கு அடித்தளம் அமைத்தார். அவரது தொலைநோக்கு பார்வை மாற்றத்திற்கு வழிவகுத்தது. இது இப்போது திருமணத்திற்கும் பண்டிகை சார்ந்த உடைகளுக்கும் அனைவருக்கும் தெரிந்த பெயராக உள்ளது..

விளம்பரம்

மான்யவர் அதன் நேர்த்தியான குர்தாக்கள், ஷெர்வானிகள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் மற்றும் பெண்களுக்கான லெஹெங்காக்கள், புடவைகள் மற்றும் ஆடைகளுக்காக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா, ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் கார்த்திக் ஆர்யன் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களின் ஒப்புதல்களால் இந்தப் பிராண்டின் புகழ் மேலும் உயர்ந்தது.

இன்று, இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 248 நகரங்களில் 662 கடைகளையும், 16 சர்வதேச விற்பனை நிலையங்களையும் நடத்தி வருகிறது. தற்போது வேதாந்த் ஃபேஷன்ஸ் நிறுவனம் ரூ.32,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரவி மோடியின் சொத்து மதிப்பு ரூ.28,000 கோடியாக (சுமார் $3 பில்லியன்) அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2023 நிலவரப்படி, இவர் இந்தியாவின் பணக்காரர்களில் 64வது இடத்தில் உள்ளார். ஃபோர்பஸ் பத்திரிக்கையின்படி, உலக பில்லியனர்கள் பட்டியலில் 1,238வது இடத்தைப் பிடித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
SBI vs HDFC vs கனரா வங்கி: 1 வருட FD திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்!!!

கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய கடையில் இருந்து உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டை உருவாக்கிய ரவி மோடியின் பயணம், அவரது லட்சியம், புதுமை மற்றும் கடின உழைப்பிற்கு சாட்சியாக உள்ளது.

.



Source link