Last Updated:
கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தென்கொரியாவில் 175 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் ஜிஜு நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியபடி சென்று விமான நிலையத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானம் வெடித்துச் சிதறியதால் வானளவிற்கு புகை கிளம்பியது.
உடனடியாக விமான நிலைய தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், பயணிகள் உட்பட 151 பேரின் நிலை குறித்து தெரியாததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
December 29, 2024 7:57 AM IST
Airplane Crash: 175 சென்ற பயணிகள் விமானம் விபத்து..! இதுவரை 28 பேர் உயிரிழப்பு – தென் கொரியாவில் பதற்றம்