Last Updated:
இளம் வீரர் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளை போன்று விளையாடிய அவர் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரரை விராட் கோலி சீண்டியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 வயது இளம் வீரரிடம் விராட் கோலி இப்படி நடந்து கொள்ளலாமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
மூன்றாவது போட்டி டிராவில் முடிந்த நிலையில் தற்போது நான்காவது போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக 19 வயதாகும் சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக இளம் வீரர் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளை போன்று விளையாடிய அவர் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
கோண்டாஸ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவரிடம் விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்தார். கோன்ஸ்டாசை இடித்த விராட் கோலி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க – இது என்ன கல்லி கிரிக்கெட்டா..? கோபத்தில் ஜெய்ஸ்வாலை திட்டிய ரோஹித் சர்மா
இந்த நிலையில் விராட் கோலியின் இந்த அணுகுமுறையை இந்திய ரசிகர்கள் ஆதரிக்கவில்லை. 19 வயதாகும், அதுவும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வீரர்களிடம் இப்படி ஸ்லெட்ஜிங் செய்வது அவசியம் தானா? என்று சிலர் விமர்சித்துள்ளனர். இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.
December 26, 2024 5:50 PM IST