Last Updated:
மாஸ்கோ நோக்கி வந்த 34 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் சில மாதங்களில் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் அதிரடி டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு, பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாஸ்கோவின் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இதையும் படிக்க: “டிரம்ப்பை கொல்ல முயற்சி ஏதும் நடக்கவில்லை“ – ஈரான் அரசு கொடுத்த விளக்கம்!
மாஸ்கோ நோக்கி வந்த 34 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கலந்து உரையாடிய நிலையில், இப்பெரும் தாக்குதல் நடைபெற்றிருப்பது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
November 11, 2024 7:29 AM IST
2ஆம் உலகப்போருக்கு பிறகு மாஸ்கோ மீது மிகப்பெரிய தாக்குதல்… உக்ரைன் – ரஷ்யா போரில் மேலும் பரபரப்பு