இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேரடியாக இந்திய அணி பங்கேற்கும்.

இல்லாவிட்டால் மற்ற நாடுகளின் போட்டி முடிவுகளின் அடிப்படையில் இந்திய அணி உலக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தீர்மானிக்கப்படும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி கொண்ட முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.

விளம்பரம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தொடக்கத்தில் குறைவாகவே இருந்தன. இருப்பினும் ஒட்டுமொத்தமாக அனைத்து வீரர்களும் திறமையாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 6-ஆம் தேதி உலக புகழ் பெற்ற மற்றும் மிகவும் பழமையான அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த மைதானமானது 1871 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 53 ஆயிரத்து 583 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை கண்டு களிக்கலாம். இங்கு நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. இங்கே முதலில் பேட்டிங் செய்த அணி 41 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 24 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.

விளம்பரம்

முதல் இன்னிங்ஸை பொருத்த அளவில் 379 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 346 ரன்களும் சராசரியாக உள்ளன. மூன்றாவது இன்னிங்ஸில்  268 ரன்களும், நான்காவது இன்னிங்ஸில் 208 ரன்களும் சராசரி ஆகும். இந்த மைதானம் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு அதிக முறை கை கொடுத்துள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைதானத்தில் விளையாடிய கோலி 3 சதங்களுடன் 509 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இளஞ்சிவப்பு நிற பந்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற உள்ளது. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்பதால் ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்த போட்டி விருந்தாக அமையும். அடிலெய்ட் மைதானத்தை பொறுத்த அளவில் இரவில் ஆட்டம் நடைபெறும் போது பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படலாம்.

விளம்பரம்

இதையும் படிங்க – KKR Captain | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… யார் தெரியுமா?

பெரும்பாலும் இந்த மைதானம் வேக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் வகையில் சம தன்மையுடன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களம் காண உள்ளது.

விளம்பரம்

.



Source link