கடந்த வியாழனன்று நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இரண்டு கதவுகள் மற்றும் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோ டாக்சியைக் காட்சிப்படுத்தினார். மேலும் டெஸ்லாவின் இலக்கு குறைந்த விலையுள்ள வெகுஜன சந்தை கார் தயாரிப்பில் இருந்து ரோபாட்டிக்ஸ் உற்பத்திக்கு மாறியிருப்பதால் ரோபோ வேனையும் அதில் சேர்த்துள்ளார்.

மேடையை அடைந்த மஸ்க் “சைபர்கேப்” குறித்து பேசும்போது, இது 2026 இல் உற்பத்தி செய்யப்படும் என்றும், இது 30,000 டாலருக்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்றும் கூறினார். காலப்போக்கில், ஒரு மைலுக்கு 20 சென்ட் வரை செலவாகும் என்றும், சார்ஜிங் கண்டிப்பாக தேவைப்படும், ஆனால் பிளக்குகளின் தேவை இருக்காது என்றும் கூறினார்.

விளம்பரம்

கார்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமராக்களை நம்பி இருக்கும், மேலும் ரோபோடாக்சி போட்டியாளர்கள் பயன்படுத்தும் பிற வன்பொருள்கள் தேவைப்படாது என்றும் மஸ்க் கூறினார். தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை நிலைப்பாட்டில் இது மிகவும் சவாலானதாக இருக்கும் என்று இதுகுறித்து முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெய் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை ஆதரிக்கும் என்பதற்கான 8 காரணங்கள்.!


நெய் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை ஆதரிக்கும் என்பதற்கான 8 காரணங்கள்.!

“எதிர்காலம் சுயமானதாகவே இருக்கும்,” என்று கூறிய மஸ்க், “எங்களிடம் 50 முழுமையான தானியங்கி கார்கள் உள்ளன. டிரைவர்களே இல்லாத மாடல் Ys மற்றும் சைபர்கேப்பைப் நீங்கள் பார்ப்பீர்கள்.

விளம்பரம்

பின்னர், 20 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ரோபோவன் எனப்படும் பெரிய, தானியங்கி வாகனத்தையும் மஸ்க் காட்சிப்படுத்தினார், மேலும் டெஸ்லாவின் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோவையும் காட்டினார்.

ஒரு ஆப் மூலம் பயணிகள் பயன்படுத்தும், ஓட்டுநர் இல்லா டெஸ்லா டாக்சிகளை இயக்குவதே மஸ்கின் திட்டமாகும், ஒவ்வொரு தனிப்பட்ட டெஸ்லா உரிமையாளர்களும், தங்கள் வாகனங்களை ரோபோ டாக்சிஸ் என பட்டியலிடுவதன் மூலம் அதை வைத்து பணம் சம்பாதிக்க முடியும்.

இதையும் படியுங்கள் :
2030-ல் நீங்கள் எவ்வளவு மொபைல் டேட்டாவை பயன்படுத்துவீர்கள் தெரியுமா?

விளம்பரம்

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் வியாழன் அன்று நடந்த நிகழ்வு, “We, Robot” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஐசக் அசிமோவின் “I, Robot” அறிவியல் புனைகதை சிறுகதைகளுக்கு வெளிப்படையான ஒப்புதலோடு நடத்தப்பட்டது. ஒரு வாகன உற்பத்தியாளர் என்பதை விட AI ரோபோட்டிக்ஸ் நிறுவனமாக கருதப்பட வேண்டும் என்கிற டெஸ்லாவின் கூற்றை இது எதிரொலிக்கிறது.

இந்த நிகழ்வில் முதலீட்டாளர்கள், பங்கு ஆய்வாளர்கள் மற்றும் டெஸ்லா ரசிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

இதில், டெஸ்லா எவ்வளவு விரைவாக ரோபோடாக்சி உற்பத்தியை அதிகரிக்க முடியும், ஒழுங்குமுறை அனுமதியைப் பெறும் மற்றும் ஆல்ஃபாபெட்ஸ் வேமோ போன்ற போட்டியாளர்களை தாண்டிய வலுவான வணிகத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் போன்ற உறுதியான விவரங்களை மஸ்க்கிடம் எதிர்பார்த்த முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

எனினும், நேரம் கூடி வரும் என்கிற நம்பிக்கையுடன் இருப்பதாக மஸ்க் கூறினார்.

இதையும் படியுங்கள் :
வாட்ஸ்அப் வீடியோ காலின்போது உங்க முகத்தை செம அழகாக காட்டணுமா? – இதை செய்யுங்க போதும்!

விளம்பரம்

மஸ்க் 2019 ஆம் ஆண்டில், நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் ரோபோடாக்சிஸ் செயல்படும் என்று மிகவும் நம்பிக்கையாக கூறினார். இத்தகைய தவறவிட்ட வாக்குறுதிகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மஸ்க் மீண்டும் தனது கவனத்தை வாகனங்களை மேம்படுத்துவதில் ஈடுபடுத்தி இருக்கிறார். சிறிய, மலிவான காரை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தவிர்த்த மஸ்க், மெதுவாக EV தேவையை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாக தெரிகிறது.

டெஸ்லா தனது EV கார்களுக்கு போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தவறியதால், இந்த ஆண்டு விநியோகத்தில் அதன் முதல் சரிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. அதிக வட்டி விகிதங்களை ஈடுசெய்யும் வகையில் விலைக் குறைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதால் லாபமும் குறைந்துள்ளது.

விளம்பரம்

சிக்கலான தொழில்நுட்பம் மற்றும் இறுக்கமான கட்டுப்பாடு ஆகியவை ரோபோடாக்ஸி சந்தையை பிடிக்க முயற்சித்த பிற நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர்கள் இழப்புக்கு வழிவகுத்தது, சிலர் கடைகளை மூடுவதற்கும் வழிவகுத்தது.
எனினும், ஜெனரல் மோட்டார்ஸ் குரூஸ், அமேசானின் சூக்ஸ் மற்றும் சீன நிறுவனமான வீ ரைட் உட்பட இன்னும் சில நிறுவனங்கள் போராடி வருகின்றன.

மற்றவர்கள் பயன்படுத்தும் லிடார் போன்ற விலையுயர்ந்த வன்பொருள் போலல்லாமல், மஸ்க் கேமராக்கள் மற்றும் AI ஐ மட்டுமே நம்பி முழு தானியங்கி வாகனத்தை இயக்க நினைத்ததால் செலவுகள் குறைக்கப்பட்டது. ஆனால் முழு தானியங்கி வாகனத்தை பொறுத்தவரையில் அதனை தொடர்ந்து இயக்கி கவனித்த போது, தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட குறைந்தப் பட்சம் இரண்டு அபாயகரமான விபத்துகளுடன் ஒழுங்குமுறை மற்றும் சட்ட ஆய்வுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

அடுத்த ஆண்டு டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் மாடல் 3 மற்றும் மாடல் Y -ன் மேற்பார்வை செய்யப்படாத முழு தானியங்கி வாகனங்களை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று மஸ்க் கூறினார்.

எனினும், ரோபோடாக்சிஸ் ஏதேனும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமா அல்லது முழு தானியங்கியை சார்ந்து இருக்குமா என்பது பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

.



Source link