நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, விவோ அதன் புதிய விவோ X200 சீரிஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில், விவோ X200 மற்றும் விவோ X200 ப்ரோ உள்ளிட்ட இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விவோ போனில், 200MP ZEISS APO டெலிபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட் மூலம் இயக்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்குகிறது.
இந்தியாவில் விவோ X200 சீரிஸ் விலை:
விவோ X200 சீரிஸ் ஆனது 2 வகைகளில் வருகிறது. விலைகளைப் பற்றி பேசுகையில், விவோ X200 இன் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.65,999 விலையில் கிடைக்கிறது. அதேசமயம், விவோ X200 ப்ரோ இன் 16GB + 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.94,999 விலையில் கிடைக்கிறது. மேலும், 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்200 ப்ரோ போனின் விலை ரூ.94,999 ஆக உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை டிசம்பர் 19 முதல் தொடங்குகிறது. இருப்பினும், இன்றிலிருந்தே நீங்கள் ப்ரீ ஆர்டர் செய்யலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வாடிக்கையாளர்கள் HDFC வங்கி மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் ரூ.7,200 கேஷ்பேக் பெறுவார்கள்.
விவோ X200 சீரிஸ் விவரக் குறிப்புகள்:
விவோ X200 ஆனது 120Hz ரெஃபிரேஷ் ரேட் உடன் சிறிய 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதே நேரத்தில் விவோ X200 ப்ரோ ஆனது 120Hz ரெஃபிரேஷ் ரேட் உடன் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. விவோ X200 ஸ்மார்ட்போனில் 7.99mm திக்நெஸ் மற்றும் 201 கிராம் எடையுடன் வருகிறது. மற்றும் விவோ X200 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8.49mm திக்நெஸ் மற்றும் 228 கிராம் எடையுடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்-க்காக IP68 + IP69 தர மதிப்பீட்டை கொண்டுள்ளன.
விவோ ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS வேர்ஷன் மூலம் இந்த போன் இயங்குகிறது. இந்த ஃபோன்களுக்கு 4 வருட OS அப்டேட்களும் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் நிறுவனம் வழங்குகிறது. இது தவிர கேமராக்கள் மற்றும் பேட்டரி பிரிவில் மிகப்பெரிய வித்தியாசத்துடன் வருகிறது. விவோ X200 ஆனது 100x டிஜிட்டல் டெலிஃபோட்டோ இமேஜ் கொண்ட 50MP டிரிபிள் சென்சார் அமைப்புடன் வருகிறது. மற்றும் விவோ X200 ப்ரோ ஆனது 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸையும், இரண்டு 50MP சென்சார்களையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க இந்திய மக்களை யோசிக்க வைக்கும் காரணிகள் என்ன? முக்கிய சவால்களை வெளிப்படுத்திய அறிக்கை
விவோ X200 ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மற்றும் விவோ X200 ப்ரோ ஆனது 90W வயர்டு மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
.