கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Source link