2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 416,974 ஆகும்.

அதன்படி, ரஷ்யாவிலிருந்து 201,920 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 178,339 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 136,084 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 131,681 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.



Source link