2024ம் ஆண்டு முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், பயணம் ஆகிய பிரிவுகளில் அதிகம் தேடப்பட்ட விவரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
திரைப்படங்கள் பிரிவில், அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய படங்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, அதிகம் தேடப்பட்ட படமாக இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ அமைந்தது. ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், அபர்சக்தி குரானா, அபிஷேக் பானர்ஜி மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில் திரில்லர் காமெடி திரைப்படமாக ‘ஸ்ட்ரீ 2’ வெளிவந்தது. ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக ஹிட் அடித்தது. உலக அளவில் ரூ.800 கோடியும், இந்திய அளவில் ரூ.600 கோடியும் வசூலித்த இந்தப் படம், தற்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாக உள்ளது.
2024-இல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த கல்கி 2898 AD இரண்டாமிடமும், விக்ராந்த் மாஸி நடத்தி 12th பெயில் மூன்றாமிடமும் இடத்தையும் பிடித்தன.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லாபாதா லேடீஸ் 4வது இடத்தையும், ஹனுமான் திரைப்படம் ஐந்தாவது இடத்தையும் பிடித்தது. சமீப ஆண்டுகளாக இந்திய அளவில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு மவுசு இருந்துவருகிறது. அது, கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலிலும் எதிரொலித்துள்ளது.
இந்த ஆண்டு இந்த பட்டியலில் 6 படங்கள் இடம்பிடித்துள்ளன. மகாராஜா, மஞ்சும்மல் பாய்ஸ், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், சாலார் மற்றும் ஆவேசம் ஆகிய ஐந்து திரைப்படங்கள் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை பிடித்துள்ளன. ஏற்கனவே இந்த லிஸ்டில் 2898 AD இரண்டாவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
.