2024 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலித்துள்ளது.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் ரூ.1,958,088 மில்லியன் (ரூ.1,958 பில்லியன்)என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதில் ரூ. 1,023,207 மில்லியன் வருமான வரியாகவும், ரூ. 714,684 மில்லியன் பெறுமதிசேர் வரியாகவும் (VAT) வசூலிக்கப்பட்டுள்ளது.

2023 வரி வருமானத்துடன் ஒப்பிடும் போது ரூ. 392,229 மில்லியன் அதிகரித்த வரி வருமானத்தை 2024 இல் இறைவரித் திணைக்களம் பதிவு செய்துள்ளதோடு அது, 25.1% அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post 2024ல் வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம் appeared first on Daily Ceylon.



Source link