Last Updated:

ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தாலிருந்து தலா 3 வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டிசை சேர்ந்த ஒருவர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி

2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போதும் கடந்த ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான 11 பேர் கொண்ட சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியை இன்று ஐசிசி வெளியிட்டது.

இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை. கடந்த ஆண்டு இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இலங்கைக்கு எதிராக அந்த நாட்டில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

கடைசி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டுக்கான சிறந்த அணியில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தாலிருந்து தலா 3 வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டிசை சேர்ந்த ஒருவர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க – ஐசிசி தரவரிசையில் டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை.. ஸ்மிருதி மந்தனா புதிய ரிக்கார்ட்

ஐசிசி அறிவித்துள்ள 2024 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு-

சரித் அசலங்கா (கேப்டன்) (இலங்கை), சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பதும் நிசாங்கா (இலங்கை), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்) (இலங்கை), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (மேற்கு இந்தியத் தீவுகள்), அஸ்மத்துல்லா உமர்சாய் (ஆப்கானிஸ்தான்) ), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்), ஏ.எம்.கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்).



Source link