Last Updated:
28 வயதாகும் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் 57.86 ரன்கள் சராசரியாக எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 95.15 ஆக உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கயாக இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அவர் ஏராளமான ரன்களை குவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவருக்கு ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை என்ற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்மிருதி மந்தனா 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு மட்டும் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 747 ரன்களை எடுத்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு மட்டும் 4 சதங்கள் விளாகியுள்ளார் செய்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. கடந்த ஆண்டில் இவர் எடுத்த ரன்களில் 95 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
28 வயதாகும் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் 57.86 ரன்கள் சராசரியாக எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 95.15 ஆக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் இவர் அடுத்தடுத்து சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இதேபோன்று அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா அடுத்தடுத்து சதம் அடித்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர் என்ற பட்டத்தை ஐசிசி வழங்கி கவுரவித்துள்ளது.
January 27, 2025 3:47 PM IST