2024ம் ஆண்டு கடைசியில் இருக்கிறோம். இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல்கள் என இந்த ஆண்டு நடந்த அனைத்திலும் சிறந்தது இதுதான், இவர்கள்தான் என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியாகும். இந்த பட்டியலுக்காக ரசிகர்கள் பலரும் காத்திருப்பதும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம் முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது அடுத்தடுத்த பட்டியல்கள் வெளியாகி வருகிறது.

விளம்பரம்

அந்த வகையில், “Most Popular Stars of 2024” என்ற பட்டியலை IMDb நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில உள்ள பிரபலம் யார்? டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள அந்த ஒரு தமிழ் பிரபலம் யார் என்பதை இங்கே பார்க்கலாம். “Most Popular Stars of 2024” பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் “அனிமல்” படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை த்ரிப்தி டிம்ரி. இரண்டாம் இடத்தை பிரபல நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார்.

விளம்பரம்

ஷாருக்கான் 4வது இடத்திலும், நாகசைதன்யாவின் 2வது மனைவி சோபிதா 5வது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் 7ம் இடத்திலும் உள்ளார். பாலிவுட் பிரபலம் ஆலியா பட் 9வது இடத்திலும், தெலுங்கு ஸ்டார் நடிகர் பிரபாஸ் 10வது இடத்திலும் உள்ளனர்.

விளம்பரம்

இந்த பட்டியலில் ஒரே ஒரு தமிழ் பிரபலம் இடம்பிடித்துள்ளார், அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை சமந்தா தான். IMDb வெளியிட்டுள்ள “Most Popular Stars of 2024” பட்டியலில் 8வது இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார்.

.





Source link