நடப்பாண்டிலேயே ஸ்மார்ட் ஃபோன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதைவிட அடுத்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டில் ஸ்மார்ட் ஃபோன்களின் விலை இன்னும் காஸ்ட்லியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5G நெட்வொர்க்கின் வருகையால் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பிரீமியமயமாக்கல் உள்ளிட்டவை காரணமாக வரும் 2025ஆம் ஆண்டில் ஸ்மார்ட் ஃபோன் வாங்க தற்போது இருப்பதைவிட அதிக கட்டணம் செலுத்த தயாராக இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது.

விளம்பரம்

மார்க்கெட் அவுட்லுக் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய சராசரி விற்பனை விலை (ASP – average selling price) 3%ஆக அதிகரித்து $365ஆக இருக்கும் என்றும், வரும் 2025ஆம் ஆண்டில் இது மேலும் 5% அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் மக்கள் இப்போது அதிக சக்திவாய்ந்த ப்ராசஸர்கள் மற்றும் AI கொண்ட அதிக விலையுள்ள ஸ்மார்ட் ஃபோன்களை வாங்க முன்பை விட தற்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

AI, குறிப்பாக generative AI காரணமாக நல்ல ஸ்மார்ட் ஃபோன்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் AI அம்சங்களை விரும்ப தொடங்கியுள்ளனர். எனவே, ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள் அதிக சக்திவாய்ந்த CPU, NPU மற்றும் GPU ஆகியவற்றைக் கொண்ட சிப்களை உருவாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இந்த சிப்செட்ஸ்களை தயாரிக்க அதிக செலவாகும். எனவே ‘AI போன்களை வாங்க மக்கள் அதிக முன்னுரிமை கொடுக்கும்போது, மொபைல்களில் இடம்பெறும் ​​AI அம்சங்களால் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக பிரீமியம் பிரிவில் மேம்படுத்தல்களை அதிகரிக்க GenAI போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என அறிக்கை கூறுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
google: கூகுளில் இந்த 6 வார்த்தைகளை தேடினால் ஆபத்து தேடி வரும்.. ஏன் தெரியுமா?

நடப்பாண்டின் முதல் பாதியில், $1,000 (தோராயமாக ரூ. 84,000) மற்றும் அதற்கு மேல் விலையுள்ள ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சிறந்த திறன்களைக் கொண்ட மொபைல்களை வாங்க விரும்புவதால் முக்கிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் டிவைஸ்களில் GenAI தொழில்நுட்பங்களை அளிக்க தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல மொபைல் தாயரிப்பு நிறுவனங்கள் 4nm மற்றும் 3nm போன்ற மேம்பட்ட ப்ராசஸ் நோட்ஸ்களை (process nodes) ஏற்றுக்கொள்வதால், அடுத்த ஆண்டு முதல் wafer உற்பத்தியுடன் தொடர்புடைய செலவுகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Companion mode: ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி? – முழு விவரம்!

இந்த அதிகரிப்பு GenAI-ஐ இணைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட Qualcomm மற்றும் MediaTek தயாரிப்புகளின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது. குவால்காம் மற்றும் மீடியாடிக் போன்ற நிறுவனங்களின் சமீபத்திய SoC தயாரிப்புகள் அதிக விலையுடையவை மட்டுமல்ல, அதிசக்தி வாய்ந்தவையாகவும் உள்ளன. மேம்படுத்தப்பட்ட AI திறன்கள், குறிப்பாக NPU-க்களுக்குள், இந்த சிப்கள் சிக்கலான டாஸ்க்குகளை மிகவும் திறமையாக செய்ய அனுமதிக்கின்றன. SoC-க்களின் விலை அதிகரிப்பு ஸ்மார்ட் போன் விலைகளின் ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு பங்களிக்கும் அதே நேரம், மெமரி-க்களின் விலையும் ஒரு முக்கியமான காரணியாகும்.

விளம்பரம்

.



Source link