Last Updated:

அவ்வப்போது ஓய்வூதிய திட்டங்களை கண்காணியங்கள். பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஓய்வூதிய திட்டங்கள் உங்களுக்கு பின்னாளில் பலன் உள்ளதாக அமையும்.

News18

வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும். ஆனால் அதை எப்படி செய்வது என்பதை நம்மில் பலர் தவறான முடிவுகளையே பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். இதனால் அவர்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய முடிவதில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளார்கள்.

அதை பின்பற்றினால் உங்களது பொருளாதாரம் முன்பு இருந்ததை விடவும் மேம்படுவதை பார்க்கலாம். முதலில் எமர்ஜென்சி ஃபண்ட் எனப்படும் அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

குறைந்தது 6 முதல் 12 மாதங்களுக்கான செலவை நிதியாக சேமித்து வைத்திருக்க வேண்டும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேலை இழப்பு, எதிர்பாராமல் நடக்கும் மருத்துவ செலவுகள் போன்றவற்றுக்கு இந்த பணம் உங்களுக்கு உதவும். செலவுகளை கண்காணித்து தேவையற்ற செலவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

இதனை எளிதாக உருவாக்கினாலும் அதனை பின்பற்றி நடைமுறைப்படுத்துவதில் தான் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். உலகில் உச்ச நிலையை அடைந்த பலரும் தங்களது தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தியவர்கள்தான். எனவே மற்ற பொருளாதார மேம்பாடுகளுடன் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி புதிய திறமைகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இதையும் படிங்க – Gold Rate Today : வார இறுதியில் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

அவ்வப்போது ஓய்வூதிய திட்டங்களை கண்காணியங்கள். பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஓய்வூதிய திட்டங்கள் உங்களுக்கு பின்னாளில் பலன் உள்ளதாக அமையும். இது போன்ற பல நிதி மேம்பாட்டு ஆலோசனைகள் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட சிலவற்றை முதலில் பின்பற்றினால் நிதி நிலைமை முன்பு இருந்ததை விட மேம்பாடு அடையும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.



Source link