Last Updated:

உலகில் முதல் நாடாக பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது.

News18

2024க்கு விடை கொடுத்து 2025-ஐ வரவேற்க உலகம் முழுக்க மக்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர். 2025 புத்தாண்டு வரவேற்புக்கான கொண்டாட்டங்கள், வாழ்த்து செய்திகள் உள்ளிட்டவையும் தயாராகி வருகின்றன. ஆண்டின் முதல் நாளை உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் வரவேற்க பல்வேறு உறுதி மொழிகளுடனும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் 2025 புத்தாண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் 2025ம் ஆண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் இதனை உற்சாகமாக கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு கூறியும் 2025-ஐ வரவேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2025 புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் இன்று இரவு 12 மணிக்கு 2024ம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2025 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link