வழக்கம் போலவே 2025 பொங்கலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களின் ரிலீசாக அமைய உள்ளது. பிரம்மாண்ட இயக்குனராக இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஷங்கர் தனது இந்தியன் 2 படத்தின் படுதோல்வியால் பின்னடைவை சந்தித்து இருந்தார்.
இந்த படம் உருவான போதே தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் (Game Changer) என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலையொட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்துடைய ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதேபோன்று சூர்யா முதலில் ஒப்பந்தமாகி பின்னர் விலகிய பாலா இயக்கியிருக்கும் வணங்கான் என்ற திரைப்படமும் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்துள்ளார். இந்த படத்துடைய மேக்கிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன. கடைசியாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த பரதேசி என்ற படம் தான் பாலாவுக்கு ஹிட்டாக அமைந்தது.
அதன் பின்னர் அவர் இயக்கிய தாரை தப்பட்டை, நாச்சியார் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன. இதன் பின்னர் அவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் வணங்கான் திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் குட் பேட் அட்லி என்ற திரைப்படமும் பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது.
இன்னும் சில நாட்களில் இந்த படத்துடைய ஷூட்டிங் நிறைவுபெறவுள்ள விறுவிறுப்பாக போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடித்து படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டு வர பட குழுவினர் முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் வழக்கம் போலவே இந்த பொங்கலும் சினிமா ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.