கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் பெரிய மற்றும் சிறந்த பேட்டரிகளை வழங்க போட்டி போட்டி கொண்டு தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் பேட்டரி திறன் மிகப்பெரிய அப்கிரேட்டை காணும் ஆண்டாக இருக்கலாம்.
ஏனெனில் சமீபத்திய அறிக்கைகளின்படி, அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோன்களில் 8,000mAh திறன் கொண்ட பேட்டரிகள் கொடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு அறிமுகமாகி இருக்கும் சில ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோன்கள் ஏற்கனவே பேட்டரி திறனுக்கான புதிய வரையறைகளை அமைத்துள்ளன.
குறிப்பாக Oppo Find X8 சீரிஸின் பேட்டரி செயல்திறன் கவரும் வகையில் உள்ளது. அதே போல Realme GT 7 Pro மொபைலை மதிப்பாய்வு செய்ததில், இந்த ஃபிளாக்ஷிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக பேட்டரி தனித்து நிற்கிறது.
உண்மையை கூற வேண்டுமெனில், சீன தயாரிப்பான இந்த ஃபிளாக்ஷிப் மொபைல்கள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன்றவற்றை விட அதிக செயல்திறனை கொண்டுள்ளன. Realme GT 7 Pro ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை கொண்டுள்ளது, அதே நேரம் iQOO 13 மற்றும் Oppo Find X8 Pro ஆகியவை முறையே 6,150mAh மற்றும் 5,910mAh பேட்டரிக்களுடன் வருகின்றன. இவற்றுடன் ஒப்பிடும்போது சாம்சங்கின் S24 Ultra மற்றும் ஆப்பிளின் iPhone 16 Pro Max ஆகியவை முறையே 5,000mAh மற்றும் 4,685mAh என்கிற ரீதியில் சிறிய பேட்டரிகளையே கொண்டுள்ளன.
இதனிடையே டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேஷன், நோட்புக் செக் அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டு மொபைல் உற்பத்தியாளர்கள் குறிப்பாக Realme நிறுவனமானது விரைவில் பெரிய கெப்பாசிட்டி பேட்டரிகள் கொண்ட ஃபிளாக்ஷிப் மொபைல்களை அறிமுகப்படுத்த கூடும் என்று கூறியுள்ளது.
அறிக்கைகளின்படி, ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் மொபைல் ஒன்றிற்காக பல்வேறு பேட்டரி கான்ஃபிகரேஷன்களை சோதித்து வருகிறது, ஒருவேளை அது வரவிருக்கும் மொபைல் Realme GT 8 Pro-ஆக இருக்கலாம்.
சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி ரியல்மி நிறுவனம் பின்வரும் பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் ஸ்பீடை சோதித்து வருகிறது:
– 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட7,000mAh பேட்டரி மற்றும் 42 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது.
– 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7,500mAh பேட்டரி மற்றும் 55 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது.
– 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8,000mAh பேட்டரி மற்றும் 70 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது.
குறிப்பிடத்தக்க வகையில், சோதனையின் கீழ் உள்ள அனைத்து பேட்டரிகளும் திறன் மற்றும் சார்ஜிங் ஸ்பீட் இடையே சமநிலையை நிரூபிக்கின்றன. உதாரணமாக, 8,000mAh வேரியன்ட் ஒப்பிடமுடியாத திறனை வழங்குதோடு, அதன் சார்ஜிங் நேரம் சிறிய கான்ஃபிகரேஷன்களை விட ஒப்பீட்டளவில் மெதுவாக உள்ளது. எனினும் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட்ஸ்களுடன் ஒப்பிடுகையில் இவ்வளவு பெரிய பேட்டரி முமுமையாக் சார்ஜ் ஆக 70 நிமிடங்கள் என்பது சிறப்பான ஒன்று.
ஒருவேளை ரியல்மி நிறுவனம் 8,000mAh பேட்டரியை தனது தயாரிப்புகளில் வழங்குவதில் வெற்றி பெற்றால், அது அல்ட்ரா-லாங்லாஸ்ட்டிங் ஸ்மார்ட் போன்களின் புதிய பிரிவை உருவாக்க முடியும். மேலும் இது அதன் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் குறிப்பாக பிரீமியம் செக்மென்ட்டில் இன்னும் உறுதியான நிலையை அடைய இந்த பேட்டரி உதவ கூடும்.
.