தெற்காசிய நாடான பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயலால் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு, படகுகள் கடலில் இருந்து அகற்றப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
‘கிராத்தான்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலால், ககாயன் மற்றும் படங்காஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள பாலிண்டாங் தீவின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 175 முதல் 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும், இந்தப் புயல் தற்போது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, செவ்வாய்க்கிழமை தைவான் நோக்கி வடகிழக்கே திரும்பும் என்றும், அப்போது இது ‘சூப்பர் புயலாக’ மாறக்கூடும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில், படங்காஸ் அருகிலுள்ள பாபுயான் தீவு மற்றும் ககாயன் மாகாணத்தின் கரையோர கிராமங்களில் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க:
“உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
இந்தப் புயல் காரணமாக, ககாயன் மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடலோர மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல வட மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வோரு ஆண்டும் பிலிப்பைன்ஸை சுமார் 20 புயல்கள் தாக்குகிறது. பல எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ என்ற இடத்தில் இந்தத் தீவுகள் அமைந்துள்ளதால், இந்தத் தென்கிழக்கு ஆசிய நாடு உலகில் அதிக பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
2013 ஆம் ஆண்டு உலகில் இதுவரை பதிவான மிகச் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றான ‘ஹையான்’ புயலால், 7,300 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புயல் காரணமாக, மத்திய பிலிப்பைன்ஸில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
.