புதுமையான சிந்தனையும், கடின உழைப்பும், நேர்மையும் எந்த தொழிலையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு அமிரா ஷா ஒரு உதாரணம் என்றே சொல்லலாம். உலகத் தரம் வாய்ந்த டயக்னோஸ்டிக் லேப் ஆக அங்கீகரிக்கப்பட்ட மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் இன்று உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது மற்றும் நிறுவனத்தின் வெற்றிக்கு பெரும்பாலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமிரா ஷா தான் காரணமாகும். 21 வயதில், அமெரிக்காவில் அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு, தன் லட்சியத்திற்காக இந்தியாவுக்குத் திரும்பி, தற்போது மிகப்பெரிய சாம்ராஜியத்தை அமைத்தார்.
தனது 22 வயதில் தொழில்துறையில் அறிமுகமான அமிரா, குறுகிய காலத்தில் ரூ.11,119 கோடி ஹெல்த்கேர் நிறுவனத்தை உருவாக்கினார். இந்திய தொழிலதிபர் அமிரா ஷா, புகழ்பெற்ற டயக்னோஸ்டிக் லேப் செயின் ஆன மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். அமிராவின் தந்தை சுஷில் ஷா ஒரு மருத்துவர் ஆவார். இவர் ஷா லேப் என்ற டயக்னோஸ்டிக் லேப்-ஐ நடத்தி வந்தார். இன்று இது இந்தியாவின் முதல் மல்டிநேஷனல் டயக்னோஸ்டிக் லேப் என்ற பெயரைப் பெற்றுள்ளது. தற்போது இந்த லேப் ஆனது உலகின் ஏழு நாடுகளில் இயங்கி வருகிறது. தற்போது, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேரின் 17 ஆய்வகங்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
அமிரா மும்பையில் உள்ள பிரபல கல்லூரியில் காமெர்ஸ் பட்டம் பெற்றார். அதன்பிறகு, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பைனான்ஸ் துறையில் பட்டம் பெற்றார். மேலும் அமிரா, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் (OPM புரோகிராம்) பழைய மாணவரும் ஆவார் மற்றும் நியூயார்க்கில் உள்ள கோல்ட்மேன் சாச்ஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அமிரா, 2001 ஆம் ஆண்டு தனது தந்தையின் லேப் தொழிலை எடுத்து நடத்த முடிவு செய்தார். இந்தியாவில் தனது, அதாவது தனது 22 வயதில் தந்தையின் பாதோலஜி பிசினஸ்-க்கு பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற இராகு அயராது உழைத்து, நிறுவனத்தை ஒரு சிறிய லேப்பிலிருந்து ரூ.11119 கோடி சந்தைக்கு வெற்றிகரமாக வழிநடத்தினார்.
அமிரா ஷாவின் தலைமையின் கீழ், மெட்ரோபோலிஸ் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது நிறுவனத்தின் பங்கின் விலை ரூ. 2,150.15 ஆகும். பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கு வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் மைக்ரோ-நிதி வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டில் ஒரு இலாப நோக்கற்ற தளமான Empowerrace ஐ அமிரா நிறுவினார்.
அமிரா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு மன்றங்களில் பேச்சாளராகத் தோன்றி 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் இந்தியாவால் வணிகத்தில் 50 பணக்கார பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அமிரா, டோரண்ட் பார்மா உட்பட பல்வேறு இந்திய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இன்டிபென்டென்ட் டைரக்டராகவும் உள்ளார். அவர் NATHealth (இந்திய ஹெல்த்கேர் ஃபெடரேஷன்) மூத்த துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
.