நீங்கள் வெகு தூரம் பயணம் செய்யுபோது இசையை ரசிக்க, போர்ட்டபிள் ஸ்பீக்கரை வாங்க திட்டமிட்டால், சில நாட்கள் காத்திருக்கவும். சியோமி தனது புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கராக இந்தியாவில் சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிறுவனமே அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஆனது சமீபத்தில் இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 14 சீரிஸ் மற்றும் ரெட்மி பட்ஸ் 6 உடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பீக்கரில் அதிகபட்சமாக 30W ரேட் அவுட்புட், டூயல் லார்ஜ் சப்வூப்பர் ரேடியேட்டர்கள், டிவி அல்லது ஸ்மார்ட்போனுடன் ஸ்டீரியோ பேரிங் சப்போர்ட் மற்றும் புளூடூத் 5.4 ஆகியவற்றுடன் வருகிறது. மேலும், இந்த புளூடூத் ஸ்பீக்கர் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்காக IP67 தர மதிப்பீடு கொண்டுள்ளது. இந்த சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஆனது ஏற்கனவே உலக சந்தைகளில் விற்பனையில் கிடைக்கிறது.
விலை எவ்வளவு?:
சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஆனது இந்தியாவில் அறிமுக சலுகையில் ரூ.3,499 விலையில் கிடைக்கும். ஆனால், இதன் எம்ஆர்பி விலை ரூ. 3,999 ஆகும். இந்த புளூடூத் ஸ்பீக்கர் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் mi.com, பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சியோமி ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். இது கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர்:
சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் ஆனது அதிகபட்சமாக 30W அவுட்புட் உடன் டைனமிக் ஆடியோவை வழங்குகிறது. இது லோ ஃப்ரிகொன்சி சவுண்ட்களை உருவாக்க டூயல் சப்வூப்பர் ரேடியேட்டர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புளூடூத் ஸ்பீக்கர் ஒரு டைனமிக் ஈக்விலிப்ரியம் சப்போர்ட் உடன் வருகிறது. இது வெவ்வேறு ஃப்ரிகொன்சி காம்போனென்ட்களை தானாக ஈக்வலைஸ் செய்யும் என்று கூறப்படுகிறது. இது தவிர ஸ்மார்ட் வால்யூம் பேலன்சிங் சப்போர்ட் உடனும் வருகிறது. இது ஆடியோவுக்கு ஏற்ப வால்யூமை அட்ஜஸ்ட் செய்யும். இதன் மூலம் கிளாரிட்டியான வாய்ஸ் மற்றும் பேக்கிரவுண்ட் சவுண்ட்களை கேட்க முடியும். சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இது டைனமிக் வூஃபர் எக்ஸ்டென்ஷன் சப்போர்ட் உடன் வருகிறது.
மேலும் இது ஸ்பீக்கர் ஸ்டீரியோ சப்போர்ட்-ஐ ஆதரிக்கிறது. ஸ்டீரியோ சவுண்டிற்காக மற்ற ஸ்பீக்கர்களுடன் பேரிங் ஆகும் ஆதரவையும் கொண்டுள்ளது. இது 100 ஸ்பீக்கர்களுடன் சிங்க் ஆகும். இது தவிர இந்த புளூடூத் ஸ்பீக்கர் ஆனது புளூடூத் 5.4 வழியாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ காலிங்-ஐ ஆதரிக்கிறது. பேட்டரி பொறுத்தவரையில், இது 2,600mAh லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 சதவீத வால்யூமில் 12 மணிநேரம் வரையிலான பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. அளவீடுகள் அடிப்படையில் இது 196.6 x 68 x 66 மிமீ மற்றும் 597 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரில் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் இன்க்ரஸ் பாதுகாப்பு உள்ளது.
.