Last Updated:
ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோல், 4 மாதங்களில் 828 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். விற்பனை உயர்த்த நியமிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 20 லிஸ்டில் உள்ளார்.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரையன் நிக்கோல் கடந்தாண்டில் 4 மாதங்களில் மட்டும் சம்பளமாக 828 கோடி ரூபாய் பெற்றுள்ளது உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ஸ்டார்பக்ஸ் என்ற பிரபல காபி கடை இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 50 வயதாகும் நிக்கோல் கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விற்பனை குறைந்திருந்த நிலையில் அதனை மேம்படுத்தும் நோக்கில் நிக்கோல் பணியமர்த்தப்பட்டார்.
அவர் பதவியேற்ற பிறகு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்தது. தெற்கு கலிஃபோர்னியாவில் தங்கியிருக்கும் நிக்கோல், வாஷிங்டனில் உள்ள அலுவலகத்துக்கு வந்து செல்ல, தனி விமானத்தையும் நிறுவனம் வழங்கியிருந்தது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நிக்கோலுக்கு சம்பளமாக 828 கோடி ரூபாயை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.
Also Read | மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த சம்பவத்தில் ட்விஸ்ட்.. கணவன் பகீர் வாக்குமூலம்!
அமெரிக்காவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 20 நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் நிக்கோல் இடம்பிடித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 27, 2025 11:31 AM IST