ரியல்மீ நர்ஸோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் உடன் இணைந்து ரியல்மீ பட்ஸ் என்ற TWS இயர்பட்ஸை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்கள் விரைவான சார்ஜ் ஆதரவுடன் வருகின்றன, மேலும் அவை 40 மணிநேரம் வரை மொத்த பிளேபேக் நேரத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. அவை 12.4 டைனமிக் பாஸ் டிரைவர்கள் மற்றும் டிரிபிள் மைக் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இது டூயல் டிவைஸ் கன்னெக்டிவிட்டி, 45ms அல்ட்ரா-லோ லேட்டன்சி மற்றும் 46dB வரையிலான ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சிலேஷன் ஆதரவையும் கொண்டுள்ளது. ரியல்மீ பட்ஸ் N1 ஆனது 360-டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ எஃபெக்ட் ஆதரவு மற்றும் மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்கக்கூடிய அம்சத்தை கொண்டுள்ளது.
இந்தியாவில் ரியல்மீ பட்ஸ் N1 விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
வெளியீட்டு விலையைப் பற்றி பேசினால், இந்தியாவில் ரியல்மீ பட்ஸ் N1 ஆனது ரூ.2,499 விலையில் கிடைக்கிறது. சிறப்பு வெளியீட்டு விலையில் இந்த இயர்போன்கள் ரூ.1,999ஆக விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை அமேசான் மற்றும் ரியல்மீ இந்தியா இணையதளம் வழியாக செப்டம்பர் 13 முதல் இந்தியாவில் கிடைக்கும். மேலும், அவை எனர்ஜிசிங் கிரீன் ஷேட் வண்ணத்தில் வருகின்றன.
ரியல்மீ பட்ஸ் N1 விவரக்குறிப்புகள்:
ரியல்மீ பட்ஸ் N1 ஆனது 12.4mm டைனமிக் பாஸ் டிரைவர்கள் மற்றும் டிரிபிள் மைக் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அவை 46dB வரையிலான ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சிலேஷன் மற்றும் AI-பேக்டு கால் நாய்ஸ் ரிடக்ஷன் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இந்த இயர்போன்கள் ஆனது டச் கன்ட்ரோலுடன் ஆதரிக்கின்றன மற்றும் 45ms அல்ட்ரா-லோ லேட்டன்சி மோட் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரியல்மீ பட்ஸ் N1 ஆனது புளூடூத் 5.4 மற்றும் டூயல் டிவைஸ் கன்னெக்டிவிட்டி ஆதரவுடன் வருகிறது. அவை 360 டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ எஃபெக்ட் ஆதரவு அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த இயர்போன்கள் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பாக இருக்க, இது IP55 மதிப்பீட்டுடன் வருகிறது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இயக்கப்படவில்லை என்றால், ரியல்மீ பட்ஸ் N1 இயர்பட்ஸ் சார்ஜிங் கேஸ் மூலம் 40 மணிநேரம் வரை மொத்த பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இரைச்சல் ரத்து அம்சம் இயக்கப்பட்டால், நீங்கள் 26 மணிநேர பேட்டரி பேக்அப்பை பெறுவீர்கள். மேலும் இது வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருவதால், வெறும் 10 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் ஐந்து மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும்.
.